தில்லி உயர்நீதிமன்றக் குண்டுவெடிப்பில் பலியா னோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது. குண்டுவெடிப்பில் படுகாயம் அடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டி ருந்த நபர் வியாழக்கிழமை மரணமடைந்ததைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்தது.
தில்லி உயர்நீதிமன்ற வளா கத்தில் புதன்கிழமை காலை 10.14 மணிக்கு நீதிமன்ற வாசல் 4 மற்றும் 5ன் நுழைவு வர வேற்பு பகுதியில் அடையாளம் தெரியாத தீவிரவாதி பயங்கர வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில் 11 பேர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர் இந்த தாக்குதலில் 75 பேர் படுகாயமடைந்திருந்தனர். அபாயமான நிலையில் இருந்த வர்கள் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனும திக்கப்பட்டு, சிகிச்சை அளிக் கப்படுகிறது. இந்த சிகிச்சைப் பிரிவில் இருந்த 30 வயது இளைஞர் வியாழக்கிழமை மரணமடைந்தார். அவரது பெயர் பிரமோத்குமார், மேற்கு தில்லி ஹரிநகரை சேர்ந்தவர் ஆவார்.
குண்டுவெடிப்பு நடத்திய 2 தீவிரவாதிகளின் வரை படத் தை தில்லி காவல்துறை யினர் வெளியிட்டனர். இதில் ஒருவர் 26வயது இளைஞராக வும் மற்றொருவர் 50 வயது மதிக்கத் தக்கவராகவும் இருந் தனர். குண்டுவெடிப்பு நாடாளுமன் றத்திற்கு 2 கி.மீ. அருகேயே நடந்துள்ளது.
உயர் நீதிமன்ற வளாகத் தில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து முன்னதாக தொலைக் காட்சி அலுவலகங்களுக்கு ஹூஜீ தீவிரவாத அமைப்பு இ-மெயிலில் அனுப்பியிருந்தது. இந்த இ-மெயிலை விசார ணையாளர்கள் ஆய்வு செய்த போது, ஜம்மு-காஷ்மீரில் உள்ள கிஷ்த்வார் மாவட்டத்தில் இருந்து அது அனுப்பப்பட்டது தெரியவந்தது. குற்றவாளி களை பிடிப்பது தொடர்பாக ப. சிதம்பரம் உயர்மட்டக்கூட்டத்தை நடத்தினார். இந்தக்கூட்டத் தில் தேசிய பாதுகாப்புத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் கலந்து கொண்டார். குண்டு வெடிப்புக்கு மறுநாள் உயர்நீதி மன்றம் பலத்த பாதுகாப்புடன் குழு அளவில் விசாரணை யை மேற்கொண்டது.
குண்டுவெடிப்பு தொடர் பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
சம்பவ இடத்தில் கிடைத்த துவக்க தடயவியல் அறிக்கை கள் விவரம் வந்துள்ளன. கூடு தல் தகவல்களை எதிர்பார்த்து உள்ளோம் என மத்திய உள் துறை செயலாளர் ஆர்.கே.சிங் தெரிவித்தார். உயர்நீதிமன்ற வளாகத்திற்கு வருபவர்கள் வழக்கறிஞர்கள் உள்பட அனைவரும் தங்களது அடை யாள அட்டையை காட்ட வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது. ஒவ்வொருவரும் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுப்பப்படுகிறார்கள்.
குண்டுவெடிப்பு தொடர் பாக பாட்னாவை மையமாக கொண்ட நபர் மற்றும் கார் உரி மையாளர் ஒருவரை காவல் துறையினர் தேடி வருகின் றனர். காரில் வந்த நபரும், காவல்துறை வெளியிட்ட தீவிர வாதி குறித்த வரைபடமும் ஒரே மாதிரியாக உள்ளன என்று சம்பவ இடத்தில் இருந்தவர் கள் கூறினர். சம்பந்தப்பட்ட கார் தில்லி அருகே உள்ள பரீ தாபாத் பகுதியைச் சேர்ந்தது ஆகும். அந்த வண்டி உரிமை யாளர் யார் என காவல்துறை ஆய்வு செய்கிறது.
இதனிடையே, உச்சநீதி மன்றத்திலும் பாதுகாப்பு ஏற் பாடுகள் தீவிரப்படுத்தப்பட் டன. குண்டுவெடிப்பில் காயம டைந்தவர்கள் சிகிச்சைக் கான கட்டணத்தை அரசு செலுத்த பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக