03 Sep 2011
புது தில்லி, செப். 2: கர்நாடக மாநிலத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த 133 கனிம சுரங்கங்கள் நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்டுள்ளதாக அத்துறையின் அமைச்சர் தின்ஷா படேல் தெரிவித்தார்.மக்களவையில் உறுப்பினர்களின் துணைக் கேள்வி ஒன்றுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பதிலில் அவர் கூறியது: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த சுமார் 133 கனிம சுரங்கங்களை மூட கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி பெல்லாரியில் உள்ள 93 கனிம சுரங்கங்கள் உள்பட அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் அங்கு பணிபுரிந்து வந்த சுமார் 10,304 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அதேபோல், ராஜஸ்தானில் 157, ஹரியானாவில் 87, மத்தியப் பிரதேசத்தில் 64, கோவாவில் 10, தமிழகத்தில் 2 சுரங்கங்களும் மூடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக