ஞாயிறு, செப்டம்பர் 11, 2011

எகிப்தில் இஸ்ரேல் தூதரகம் தகர்ப்பு: அவசரநிலை பிரகடனம்!

Some hundreds of Egyptian activists demolish a concrete wall built around a building housing the Israeli embassy in Cairo, Egypt, to protect it against demonstrators, as they raise their national Friday, Sept. 9, 2011. (AP Photo/Amr Nabil)எகிப்து தலைநகர் கெய்ரோவிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தைப் பொதுமக்கள் அடித்துத் தகர்த்தனர். இதனைத் தொடர்ந்து கலவரம் ஏற்பட்டத்தையடுத்து, எகிப்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் இஸ்ரேலின் தூதரக அலுவலகம் உள்ளது. ஹோஸ்னி முபாரக் அதிபராக இருந்தவரை இஸ்ரேலுக்கும், எகிப்துக்கும் இடையே நல்லுறவு இருந்து வந்தது. முபாரக்கிற்கு எதிராக மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் இஸ்ரேலுடனான உறவுக்கு எதிராக பொதுமக்கள் அவ்வபோது கிளர்ச்சி செய்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம் எகிப்து ஆயுத குழுக்களுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதில் எகிப்தைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர். இது எகிப்து மக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியது.   நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிரார்த்தனை முடிந்ததும் ஆயிரக்கணக்கான மக்கள் கெய்ரோவிலுள்ள சுதந்திர மைதானத்தில் திரண்டு அரசியல் சீர்திருத்தம், இஸ்ரேலுடனான உறவு முறித்தல் போன்ற கோரிக்கைகளை விடுத்தனர்.

அவர்களின் போராட்டம் சிறிதுநேரத்திலேயே இஸ்ரேலுக்கு எதிரான கோபத்தைக் கட்டவிழ்த்துவிட்டது. பக்கத்திலிருந்த இஸ்ரேல் தூதரகத்துக்குச் சென்ற பொதுமக்கள், அங்கு புகுந்துத் தாக்குதல் நடத்தினர். தூதரக அலுவலகத்தின் கட்டிடடம் இடிக்கப்பட்டது. தூதரகத்திலிருந்த 6 பணியாளர்களைப் பொதுமக்கள் சிறை வைத்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைக்க முற்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் காவல்துறையினரையும் தாக்கினர். தூதரக அலுவலகத்துக்குத் தீவைக்கப்பட்டது.

கலவரத்தை க்கட்டுப்படுத்த முடியாததால் நூற்றுக் கணக்கான அதிரடி கமாண்டோ ராணுவ வீரர்கள் சுதந்திர மைதானத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் 6 இஸ்ரேலிய பாதுகாவலர்களையும், தூதரக அலுவலர்களையும் மீட்டனர். அதைத் தொடர்ந்து தூதர் யிட்சாக் தனது குடும்பத்தினர் மற்றும் 80-க்கும் மேற்பட்ட இஸ்ரேல் ஊழியர்களுடன் வெள்ளிக்கிழமை இரவே விமானம் மூலம் இஸ்ரேல் திரும்பினார். 

இஸ்ரேலுக்கு எதிரான மக்களின் கோபம் நேற்றும் தொடர்ந்தது. நேற்று நடந்த கலவரத்தில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்தக் கலவரம் தொடர்பாக இதுவரை 19 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று இரவு வரை கலவரம் தொடர்ந்து நடந்தது. 

இதனால் கெய்ரோ நகரில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகள் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். "இது மோசமான சம்பவம்" என்று கூறியுள்ளார். இதற்கிடையில் "இஸ்ரேல் தூதரகத்துக்கு எகிப்து பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார்.

அரபு நாடுகளில் ஜோர்டானுக்கு அடுத்தபடியாக இஸ்ரேலுடன் அரசாங்கரீதியாக நெருக்கமும் நட்புறவும் கொண்டுள்ள நாடு எகிப்து என்பது குறிப்பிடத்தக்கது. எகிப்தில் ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக எழுந்த மக்கள் எழுச்சியின் அடிப்படை காரணங்களுள் ஒன்று, இஸ்ரேலுடனான ஹோஸ்னி முபாரக்கின் நெருங்கிய உறவு என்று கூறப்படுகிறது. எகிப்தும் இஸ்ரேலுடனான உறவை முறித்துக்கொண்டால், அது இஸ்ரேலுக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும் எனக்கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக