திங்கள், செப்டம்பர் 19, 2011

பாரத்புர்:குஜ்ஜார்களுடன் இணைந்து முஸ்லிம்களை நரவேட்டையாடிய காவல்துறை

9
புதுடெல்லி:ராஜஸ்தான் பாரத்புரில் உள்ள கோபால்கர் என்ற இடத்தில் முஸ்லிம்களுக்கும் குஜ்ஜார்களுக்கும் இடையில் கலவரம் நடந்து இரண்டு நாட்கள் ஆகியும் பதற்றம் நிலவுகிறது. அந்த பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள் காவல்துறையையோ அல்லது மற்ற அரசு துறைகளையோ நம்ப முடியாமல் பீதியில் உள்ளனர்.
முஸ்லிம்களுக்கும் குஜ்ஜார்களுக்கும் இடையில் நடந்த கலவரத்தில் போலிஸ் குஜ்ஜார்களுடன் சேர்ந்து முஸ்லிம்களை கடந்த புதன் அன்று நரவேட்டை ஆடியதால் முஸ்லிம்கள் அச்சத்தில் உள்ளனர்.
குஜ்ஜார்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நடந்த சண்டையில் காவல்துறையும் அப்பகுதி அரசு நிர்வாகத்துறையும் முற்றிலுமாக ஒருதலைப்பட்சத்துடனும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் செயல் பட்டுள்ளனர் என்பதற்கு பல தெளிவான ஆதாரங்கள் உள்ளன. இக்கலவரம் ஈத்கா பள்ளி இடம் தொடர்பாக ஆரம்பித்து சிறுது நேரத்திற்குள் துப்பாக்கி சண்டை அளவுக்கு வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் காவல்துறை குஜ்ஜார்களுடன் இணைந்து முஸ்லிம்களை சரமாரியாக சுட்டதுடன் மட்டுமல்லாமல் குஜ்ஜார்கள் முஸ்லிம்களை உயிருடன் எரித்து கொலைச்செய்ததை தடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர்.
குஜ்ஜார்களும் போலீசும் சிறுபான்மையினர் சமூகத்திற்கு எதிராக செய்துள்ள மனித உரிமை மீறல்களை மறைப்பதற்கு தற்போது கடுமையான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்பதற்கு பல ஆதாரங்கள் கிட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
“காவல்துறை குஜ்ஜார்களுடன் சேர்ந்து எங்கள் மீது தாக்குதல் நடத்தியதால் நாங்கள் செய்வது அறியாது திகைத்துப் போனோம். உயிர் பிழைப்பதற்காக வேறு வழியின்றி குளங்களில் குதித்து தப்பித்து ஓடினோம். ஆனால் போலீசும் குஜ்ஜார்களும் இணைந்து மசூதியில் இருந்தவர்களின் மீது கண்மூடித்தனமாக சுட்டு கொலை செய்ததை என்னால் தெளிவாக பார்க்க முடிந்தது” என்று கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் ஷப்னம் ஹாஸ்மி, நவைத் ஹமீத் ஆகியோர் அடங்கிய உண்மையறியும் குழுவிடம் கடந்த வியாழன் அன்று தெரிவித்தார்.
ஈத்கா பள்ளியின் அருகில் உள்ள கிணற்றில் முற்றிலுமாக எரிக்கப்பட்ட முஸ்லிம் உடல்கள் இரண்டு கிடைத்துள்ளன.
மஸ்ஜிதின் உள்ளே ஒரு பொருள் கூட உடையாமல் இல்லை. மேலும் மஜித்தின் தரையிலும் கூரையிலும் அங்கிருந்தவர்கள் அனைவரும் கடுமையாக தாக்கப் பட்டதற்கான ரத்தக் கரைகள் இருந்ததை காண முடிந்தது.
மேலும் மஸ்ஜிதின் கூரையில் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்கு உடல்களை இழுத்துச் சென்ற அடையாளங்கள் காணப்பட்டன.
சிலர் மஸ்ஜிதின் மேலிருந்து கீழே தள்ளப்பட்டு காயமுற்றோ அல்லது இறந்தோ  இருக்கலாம் எனத் தெரிகிறது. மேலும் மஸ்ஜிதின் வெளிப்புறத்தில் 15  முதல் 20  வரையிலான தோட்டாக்களின் அச்சுகள் உள்ளன.
மஸ்ஜிதில் எங்கு பார்த்தாலும் குர்ஆனின் கிழிந்த பக்கங்கள், உடைந்த கண்ணாடிகள்,சுவர்கள் மற்றும் உபரி பொருட்கள் என சிதறி கிடந்தன.
மேலும் உண்மை கண்டறியும் குழு அங்கு நடந்துள்ள மனித உரிமை மீறல்களையும் போலீசும் முஸ்லிம் மக்களின் மீது தாக்குதல் நடத்தியதற்கான தடயங்களை அறிந்து கொண்டதை உணர்ந்து கொண்ட காவல்துறை உடனடியாக உண்மை கண்டறியும் குழுவினரை கைது செய்தது. மேலும் காவல்துறை தேசிய மற்றும் பிராந்திய ஊடகங்களிடம் இருந்தும் வெளி உலகத்திடம் இருந்தும் தடயங்களை மறைக்கும் வரை அவர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். மேலும் அவர்களை அங்கு நடந்துள்ள கொடுமைகளை பார்ப்பதை விட்டும் தடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர்.
மேலும் பல்வேறு இடங்களில் இருந்து புகை வந்து கொண்டிருந்ததை கண்டு அங்கு போக முயன்றதால் அவர்களை கைது செய்தனர். அங்கு வசித்துவரும் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் இங்கு நடந்துள்ள கொடுமைகளை மறைப்பதற்காக இறந்த உடல்களை எரிக்கின்றனர் என்று கூறினர். மேலும் மனித உடல்கள் எறிவதற்கான சாட்சியாக உடல்கள் எரியும் வாடை பலமாக வீசியது.
மாவட்ட நீதிபதி குமல் கிருஷ்ணா கூறியுள்ளதாவது மிகவும் மோசமாக எரிக்கப்பட்ட நிலையில் அல்வார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒருவர் தன்னை கலவர கும்பல் தீ வைத்து கொளுத்தியதாகவும் தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள பக்கத்தில் இருந்த குளத்தில் குதித்ததாகவும் கூறினார். இச்சம்பவம் தொடர்பாக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் போலீஸ் இதுவரை பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் சார்பாக முதல் தகவல் அறிக்கையை தயார் செய்யவில்லை என்பதுதான்.
மேலும் உண்மை கண்டறியும் குழுவுடன் உரையாடியதில் தெரியவந்ததாவது இதுவரை தீக்கு இரையாக்கப்பட்ட உடல்கள் பற்றி அப்பகுதியின் நிர்வாகத்துறை எந்த பதிலையும் கூறவில்லை மேலும் அவர்கள் இச்சம்பவத்தை இரு பிரிவினருக்கு இடையில் நடந்த கலவரம் என்றுதான் கூறிவருகின்றனர். மேலும் இறந்தவர்கள் காயமடைந்தவர்கள் குறித்த சரியான எண்ணிக்கைப் பற்றி தகவல்களைத் தர மறுக்கின்றனர் மேலும் எரிக்கப்பட்ட இரு உடல்களும் தீயினால்தான் இறந்துள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.
மேலும் குறிப்பாக ஊடகங்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் செய்தி சேகரிப்பதை விட்டும் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்திய இடங்களை பார்வையிடுவதை விட்டும் தடுக்கப்படுகின்றனர். எனவே இவ்விவகாரம் தொடர்பாக போலீசின் பார்வையிலிருந்து மட்டுமே செய்திகள் வெளிவரும் என்பது தெளிவாகிறது.

thoothu online

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக