வெள்ளி, செப்டம்பர் 23, 2011

அமைதியை குழி தோண்டி புதைக்கும் இஸ்ரேல் : ஐ.நா சபையில் துருக்கி பிரதமர் ஆவேசம்


நியூயார்க் : தனி சுதந்திர நாடாக பலஸ்தீனத்தை அறிவிக்க கோரி பலஸ்தீன பிரதமர் ஐ.நா சபையில் இன்று மனு தாக்கல் செய்ய உள்ள நிலையில் ஐ.நா அவையில் பேசிய துருக்கி பிரதமர் எர்டோகன் மத்திய கிழக்கில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் அமைதியை குழி தோண்டி புதைக்கும் இஸ்ரேல் தான் என்று ஐ.நா சபை கூட்டத்தில் துருக்கி பிரதமர் எர்டோகன் ஆவேசமாக கூறினார்.

இஸ்ரேல் – பலஸ்தீன் பிரச்னையை தீர்ப்பதில் உலக நாடுகளுக்கு அக்கறை இருக்குமானால் இஸ்ரேலின் போக்கை இனியும் கண்டு கொள்ளாமல் இருக்க கூடாது என்று கூறிய எர்டோகன் இப்பிரச்னையை தீர்க்க எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் இஸ்ரேல் முறியடிப்பதாகவும் குற்றம் சாட்டினார். ஆக்கிரமிப்பு பகுதிகளில் அராஜகம் செய்வது முதல் அணு ஆயுதம் வரை உலகின் விருப்பங்களுக்கு மாற்றமாக இஸ்ரேல் நடப்பதாகவும் குறை கூறினார்.
ஐ.நா சபையின் பல தீர்மானங்களை இஸ்ரேல் மதிக்காமல் மீறியுள்ளதாக குற்றம் சாட்டிய எர்டோகன் தாம் ஒரு பெட்டி தக்காளிகளை பலஸ்தீனத்துக்கு அனுப்ப வேண்டுமென்றால் கூட இஸ்ரேலிடம் ஒப்புதல் வாங்க வேண்டுமென்பது நிச்சயம் மனிதத்தன்மையாக இருக்க முடியாது என்றும் கூறினார்.   இயற்கை வாயுவை கண்டுபிடிக்க கூட்டு முயற்சிகள் மேற்கொண்டுள்ள இஸ்ரேல் – சைப்ரஸின் முயற்சிகள் ஆபத்தானவை என்றும் தேவைப்பட்டால் நடவடிக்கை எடுப்போம் என்றும் மறைமுகமாக மிரட்டல் விடுத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக