வெள்ளி, செப்டம்பர் 23, 2011


நியூயார்க் : ஐ.நா சபையின் கூட்டத்தில் துருக்கி பிரதமர் பேசுவதற்கு முன் பேசிய ஈரான் அதிபர் அஹ்மது நிஜாத் வழக்கம் போல் அமெரிக்காவை கடுமையாக சாடினார். உலக பொருளாதார சிக்கல் உள்ளிட்ட உலகம் சந்திக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பாவே காரணம் என்றும் சாடினார்.
மேலும் அஹ்மது நிஜாத் கூறுகையில் கடந்த மே மாதம் ஓசாமா பின் லேடனை கொலை செய்த அமெரிக்க ராணுவத்தினர் கடலில் அவர் உடலை வீசியெறிந்தது உண்மையில் செப்டம்பர் 11 சதிகாரர்களை மறைக்கும் அமெரிக்க முயற்சியே என்றும் பரபரப்பாய் குற்றம் சாட்டினார்.

அஹ்மது நிஜாத்தின் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா ஐ.நா சபை கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தது. மேலும் தன் நாட்டு மக்களின் ஜீவாதாரத்தை பற்றி கவலைப்படாமல் எப்போதும் அமெரிக்க எதிர்ப்புணர்விலேயே காலம் தள்ளுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக