சனி, செப்டம்பர் 03, 2011

நைஜீரியாவில் மோதல்: 42 பேர் பலி

அபுஜா: நைஜீரியாவில்சுதந்திர தின விழா கொண்டாடுவது குறித்து இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 42 பேர் பலியாயினர். நைஜீரியாவில் சுதந்திர தின விழா கடந்த புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
சுதந்திர தின விழாவில் தங்களுக்கும்பங்கு வழங்க கோரி ஒரு தரப்பினர் பேரணி நடத்தினர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது.
இச்சம்பவத்தில் சுமார் 42 பேர் பலியாயினர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது.
இருதரப்பிலும் எத்தனை பேர் பலியாயினர் என்பதை காட்டிலும் அமைதி ஒன்றே முக்கியமானது என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக