புதன், மே 02, 2012

குடியரசு தலைவர்:ஹாமித் அன்சாரிக்கு இடதுசாரிகள் ஆதரவு, சுஷ்மாவுக்கு பிருந்தா கண்டனம்!

புதுடெல்லி:ஹாமித் அன்சாரியை குடியரசு தலைவர் பதவிக்கு நிறுத்துகிறோம். ஆதரவு தாருங்கள் என்று காங்கிரஸ் கோரினால் அவரை ஆதரிப்பதில் எங்களுக்கு தயக்கம் ஏதுமில்லை என்று இடதுசாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் செய்தியாளர்களிடம் நேற்று(செவ்வாய்க்கிழமை) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரட் பேட்டி அளித்தபோது இதனை தெரிவித்தார்.

மஹராஷ்ட்ரா:தொடர்குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு தொடர்பு – என்.ஐ.ஏ!

மும்பை:முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மலேகானில் 2006 மற்றும் 2008-ஆம் ஆண்டுகளில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி பல உயிர்களை பலிவாங்கிய ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு பூர்னா, பர்பானி, ஜால்னா மற்றும் நந்தித் ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளுடன் தொடர்பு இருப்பதை தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) கண்டுபிடித்துள்ளது.
இக்குண்டுவெடிப்புகள் அனைத்தும் மஹராஷ்ட்ரா மாநிலத்தின் மராத்வாடா பகுதியில் நடந்தேறியுள்ளது

ஓய்வு பெற்ற முஸ்லிம் போலீஸ் அதிகாரி தலைமையில் புதிய அரசியல் கட்சி!

மும்பை:பல ஆண்டுகளுக்கு முன்பு மும்பை நிழலுக தாதா சோட்டா ஷக்கீலை கைது செய்து பிரபலமானவர் ஷம்ஷேர்கான் பதான். இவர் துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றி கடந்த திங்கள் கிழமை ஓய்வுப் பெற்றார்.
இந்நிலையில் நேற்று(செவ்வாய்க்கிழமை) இவர் தலைமையில் அவாமி விகாஸ் பார்டி(AVP) என்றதொரு கட்சி துவக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் பெண் எம்.பியை சித்திரவதைச் செய்த மோடி போலீஸ்!

Congress MP breaks down in parliament saying police assaulted her in Gujaratடெல்லி:குஜராத் மாநிலத்தை ஆளும் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடியின் போலீஸ் காங்கிரஸ் பெண் எம்.பியை சித்திரவதைச் செய்துள்ளது. இதுத்தொடர்பான புகாரை மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி பிரபாபென் டேவியாட் கண்ணீர் விட்டு அழுது கூறினார்.

பாத்ரிபால் போலி என்கவுண்டர்:ராணுவ அதிகாரிகளிடம் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி!

புதுடெல்லி:பாத்ரிபால் போலி என்கவுண்டர் சம்பவத்தில் ராணுவ அதிகாரிகளிடம் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ராணுவ அதிகாரிகளை ராணுவ நீதிமன்றம்(கோர்ட் மார்ஷல்) விசாரணை நடத்தவேண்டுமா? அல்லது குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்தவேண்டுமா? என்பது குறித்து தீர்மானிக்க ராணுவத்திற்கு உச்சநீதிமன்றம் எட்டு வார கால அவகாசத்தை வழங்கியுள்ளது.

செவ்வாய், மே 01, 2012

ஜனாதிபதி தேர்தல்: பாஜக கூட்டணியிலும் பிளவு!

டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் யாரையும் ஆதரிக்க மாட்டோம் என்ற பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜின் பேச்சு அவரது சொந்தக் கருத்தாகும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கியக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது.

லெபனான் எல்லையிலும் சுவரைக் கட்டும் இஸ்ரேல்!

டெல்அவீவ்:ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் கட்டப்பட்டுள்ள பிரிவினை சுவருக்கு சமமான சுவரை லெபனான் எல்லையிலும் இஸ்ரேல் கட்டத் துவங்கியுள்ளது. லெபனான் ராணுவம் மற்றும் ஐ.நா அமைதிப்படையின் ஆதரவுடன் இச்சுவரை கட்டுவதாக இஸ்ரேல் கூறுகிறது.

சூடானில் அவசர நிலை பிரகடனம்!

கார்தூம்:தெற்கு சூடானுடன் எல்லையை பகிர்ந்துகொள்ளும் பகுதிகளில் சூடான் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. சூடானில் கோர்டோஃபான், வைட் நைல், ஸெனார் ஆகிய மாநிலங்களில் எல்லை மாவட்டங்களில் நேற்று முன்தினம் அதிபர் ஒமர் அல் பஷீர் அவசர நிலையை பிரகடனம் செய்தார்.கடந்த ஆண்டு ஜூலை மாதம் அகண்ட சூடான் துண்டிக்கப்பட்டு தெற்கு சூடான் உருவானது.

போபர்ஸ்:என்.டி.ஏ அரசும் தவறிழைத்துள்ளது – ஆர்.எஸ்.எஸ்!

புதுடெல்லி:25 ஆண்டுகள் பழமையான போபர்ஸ் ஊழல் வழக்கை விசாரணை நடத்துவதில் காங்கிரஸ் தலைமையிலான அரசு மட்டுமல்லாது பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் தவறிழைத்துள்ளது என்று சங்க்பரிவார தீவிரவாத அமைப்புகளின் தலைமையான ஆர்.எஸ்.எஸ் கூறியுள்ளது.

அஸ்ஸாம் படகு விபத்தில் 103 பேர் பலி

கவுகாத்தி:அஸ்ஸாம் மாநிலத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நீரில் மூழ்கி 103 பேர் இறந்தனர். 100 க்கும் அதிகமானோரை காணவில்லை.
அஸ்ஸாம்,துப்ரிகட் மாவட்டத்தில் பிரம்மபுத்ரா நதியில் 300 பேர்களுடன்   சென்றுகொண்டிருந்த  படகு ஒன்று நேற்று மாலை 4.20 மணியளவில் வீசிய சூறாவளியால் திடீரென கவிழ்ந்தது.

2 ஏர் இந்தியா விமானங்கள் அவசரமாகத் தரையிறக்கம்- விபத்துகள் தவிர்ப்பு

சென்னை: எரிபொருள் கசிவு காரணமாக ஏர் இந்தியா விமானம் சென்னையில் இன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
இன்று காலை சென்னையில் இருந்து 106 பயணிகள், 5 சிப்பந்திகளுடன் கொச்சிக்கு சென்று கொண்டிருந்த அந்த விமானத்தில் (எண் AI 520) நடுவானில் எரிபொருள் கசிவதை விமானிகள் கண்டுபிடித்தனர்.

இந்தியாவில் 65 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே!

புதுடெல்லி:நேசனல் சாம்பிள் சர்வே அறிக்கையின் படி இந்திய குடிமக்களில் 65 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்வதாக தெரியவந்துள்ளது.
இந்த சர்வேயின் அடிப்படையில் ஒரு இந்திய குடிமகனுக்கு நகரங்களில் அன்றாட வாழ்க்கைக்கு தேவை ரூ.66.10ஆகும். கிராமங்களில் 35.10 ரூபாய் ஆகும்.