srebrenica massacre |
நினைவகத்தில் ஏராளமானோர் திரண்டு அந்த காட்சியை கண்டுகொண்டிருந்தனர், "அவனை கடவுள் நரகத்தில் தள்ளி எரிப்பனாக" என்று நிலவியிருந்த மௌனத்தை கலைத்தார் ஒரு பெண், அவர் செர்பிய இனபடுகொலையில் தனது கணவனை இழந்தவள்,
ஜென் ரேட்கோ மால்டிக் (69), முன்னால் செர்பிய படைத்தளபதி இனப்படுகொலை செய்வதில் நரேந்திர மோடியின் குரு, 1995-ஆம் ஆண்டு போஸ்னியாவில் ஸ்ரெப்ரெனிகாவில் 8 ஆயிரம் முஸ்லிம்களை கூட்டுப்படுகொலை செய்வதற்கு தலைமை வகித்தவன்.
1992 ஆம் ஆண்டு முதல் 1995-ஆம் ஆண்டுவரை சரஜோவில் நடந்த கூட்டுப் படுகொலையில் 12 ஆயிரம் பேர் கொல்லப்பட்ட சம்பவத்திலும் இவனுக்கு பங்குண்டு.
ஹனிபா த்ஜொகழ் என்பவர் கூறும்போது, "நாங்கள் அவன் வழக்கில் தீர்ப்பு கூறுவதாக இருந்தால் அவனை இங்கே இழுத்து வந்து உயிரோடு வைத்து துண்டம்துண்டமாக வெட்டி கொல்வோம்" என்றார்,
"எங்கள் உறவினர்களை அவன் கொன்றான், அவனால் குழந்தைகளை இழந்த தாய்மார்களும், பெற்றோர்களை இழந்த குழந்தைகளும் தான் அவன் விஷயத்தில் முடிவெடுக்க வேண்டும்" என்றார் மெஜ்ரா, இப்பெண் தனது இரு மகன்களை இப்படுகொலையில் இழந்தவர், ஆயிரக்கணக்கான கல்லறைகளின் நடுவில் அமர்ந்திருந்து நீதிமன்ற நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பை பார்த்துக்கொண்டிருந்தார்,
அங்கு அமர்திருந்த பெண்கள் முதியவர்கள்., எல்லோரும் தலையை மறைக்கும் துணி அணிந்திருந்தனர், 16 வருடங்களுக்கு முன் இப்படுகொலையில் கணவன், மற்றும் குழந்தைகளை இழந்தவர்கள்,
source:- AFP and The Star,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக