20 Jun 2011,புதுடெல்லி:மதம் மாறிவிட்டார் என்பதால் குழந்தையை பாதுகாக்கும் உரிமையை தாயிடமிருந்து பறிக்க இயலாது என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியை சார்ந்த ராம் குமார் மவ்ரியா என்பவரின் மகனின் மனைவி சாவித்ரி தேவி என்பவர் அவருடைய மரணத்திற்கு பிறகு இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு மொய்ன் ஹக் என்பவரை திருமணம் புரிந்தார்.
முதல் திருமணத்தின் போது பிறந்த பதினான்கு வயது மகன் இஸ்லாத்தை தழுவிய சாவித்ரியுடன் வசித்து வருகிறார். இவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரி அவருடைய பாட்டனார் மவ்ரியா நீதிமன்றத்தை அணுகினார்.
இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கவுதம் மனான் தனது தீர்ப்பில் கூறியதாவது:தாயின் மதம் அல்ல முக்கியம். அவர் தனது குழந்தைக்கு கல்வியும், பாதுகாப்பும் அளிக்கின்றாரா என்பதைத் தான் பரிசோதிக்க வேண்டும் என தெரிவித்தார்.
thoothuonline
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக