வியாழன், ஜூன் 09, 2011

சுஷ்மாவின் நள்ளிரவு நடனம்!!! - நாட்டிற்கே அவமானம்

ராஜ்காட்டில் காந்தி சமாதிக்கு முன்பு பா.ஜ.க நடத்திய உண்ணாவிரதப்போராட்டத்தில் மக்களவை எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜின் நடனமாடியது நள்ளிரவில் தூங்குவதற்காக பா.ஜ.க தலைவர்கள் நழுவியது என பா.ஜ.கவினர் அடித்த கூத்தினால் நாட்டிற்கே அவமானம் ஏற்பட்டுள்ளது.


பாபா ராம்தேவிற்கு எதிரான போலீஸ் நடவடிக்கையை கண்டித்து தேசிய அளவிலான போராட்டத்திற்கு துவக்கம் குறிப்பதற்கு பா.ஜ.க நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் தான் அக்கட்சிக்கு கடுமையான அவமானத்தை பெற்று தந்துள்ளது.

கோடிக்கணக்கான பணத்தை முடக்கி ஆர்.எஸ்.எஸ்ஸின் யோகா குரு பாபா ராம்தேவ் நடத்திய ஹைடக் உண்ணாவிரத நாடகத்தின் இன்னொரு நகலாக மாறியது பா.ஜ.க நடத்திய உண்ணாவிரதப்போராட்டம். ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணி முதல் திங்கள் கிழமை மாலை 7 மணிவரையிலான 24 மணிநேர சத்தியாகிரகத்தை பா.ஜ.க நடத்தியது.

திங்கள் கிழமை அதிகாலை இரண்டு மணி அளவில் மேடையில் மக்களவை எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் நடனம் ஆடினார்.இருகைகளையும் மேலே உயர்த்தி பாடலுக்கு தகுந்தவாறு ஆடினார் சுஷ்மா. முன்னாள் டெல்லி மேயர் ஆரதி மெஹ்ராவும், பா.ஜ.கவின் பொதுச்செயலாளர் விஜய் கோயலும் தாளத்துடன் கைக்கொட்டி சுஷ்மாவுடன் ஆடினர்.பா.ஜ.க வின் இளைஞர் பிரிவான யுவமோர்ச்சாவின் தேசிய தலைவர் அனுராக் தாக்கூர் விசில் அடித்து உச்சஸ்தாதியில் பாட்டு படித்து உற்சாகம் ஊட்டினார்.

இதற்கிடையே இன்னொரு கூத்தும் அரங்கேறியது.சத்தியாகிரக போராட்டம் நடத்திய பா.ஜ.கவின் மூத்த தலைவர்கள் நள்ளிரவில் தூக்கம் கண்ணை கறக்கியவுடன் வசமாக ஏ.சி அறைகளுக்கு உறங்குவதற்காக நழுவினர். முரளி மனோகர் ஜோஷி தூங்குவதற்காக 12.30 மணிக்கே நழுவிவிட்டார்.

அதிகாலை இரண்டரை மணிக்கு அத்வானியும், அருண்ஜெட்லியும் நழுவினர். நடனமாடி தளர்ந்துபோன சுஷ்மா சுவராஜும் ஷானவாஸ் ஹுஸைனும் சற்றுநேரம் நழுவுவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டு மூன்று மணிக்கு எஸ்கேப் ஆகினர். இறுதியில் பா.ஜ.கவின் தலைவர் நிதின்கட்கரியும் தூங்க சென்றுவிட்டார். குளித்து முடித்து காலை 8 மணிக்கு ஃப்ரஸ்ஸாக போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்தனர் பா.ஜ.க தலைவர்கள்.

பா.ஜ.கவின் போராட்டத்தை கடுமையான வார்த்தைகளால் குற்றம் சாட்டியுள்ளது காங்கிரஸ் கட்சி. மகாத்மா காந்தியின் படுகொலைக்கு காரணமானவர்கள் அவருடைய சமாதிக்கு அருகில் போராட்டம் நடத்துகின்றனர். எதிர்கட்சி தலைவரும், அவருடைய தோழர்களும் நடனமாடியது எவ்வகையான போராட்டம்? என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனார்தனன் திரிவேதி கேள்வி எழுப்பினார். ராம்தேவின் மீதான போலீஸ் நடவடிக்கைக்கு பா.ஜ.க எதிர்ப்பு தெரிவிக்கிறதா? அல்லது கொண்டாடுகிறதா? என மத்திய அமைச்சர் குலாம்நபிஆசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக