ஊழலுக்கு கறுப்பு பணத்திற்கும் எதிராக ஆன்மீகத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி கோடிகளில் புரளும் RSS-ன் யோகா குரு பாபா ராம்தேவின் உண்ணாவிரத நாடக போராட்டத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவில் தடபுடல் ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.
ஊழலுக்கு எதிராக அண்மையில் போராட்டம் நடத்திய அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு 30 லட்சத்திற்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டது. ஆனால், ராம் தேவின் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு கோடிக்கணக்காண ரூபாய் செலவிடப்படுகிறது.
ஊழலுக்கு எதிராக அண்மையில் போராட்டம் நடத்திய அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு 30 லட்சத்திற்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டது. ஆனால், ராம் தேவின் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு கோடிக்கணக்காண ரூபாய் செலவிடப்படுகிறது.
ராம்லீலா மைதானத்தில் மழை, வெயிலை தாங்கும் இரண்டரை லட்சம் சதுர அடி அகலத்தில் பிரம்மாண்டமான பந்தல் கட்டப்படுகிறது. எட்டு அடி உயரமும், எழுபது அடி நீளமும் கொண்ட மேடையில் ராம்தேவ் உட்காருவார்.20 எல்.சி.டி ஸ்க்ரீன்களும், 1000 கூலர்கள், ஃபேன்கள் மாட்டப்பட்டுள்ளன.
இரண்டரை லட்சம் பேர் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.ராம் லீலா மைதானத்தில் 1000 கழிப்பறைகளும், 650 சிறுநீர் கழிக்கும் அறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. 100 படுக்கைகள் வீதமுள்ள சிறப்பு கூடாரங்களும் உள்ளன. ராம்தேவின் பிரம்மாண்ட கட் அவுட்டுகள் பேனர்கள் டெல்லி முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன.
ராம்லீலா மைதானத்தில் வருகைதரும் ராம்தேவின் ஆதரவாளர்களுக்கு தினமும் ஐந்து லட்சம் லிட்டர் சுத்தநீர் வழங்க ஏற்பாடுச்செய்யப்பட்டுள்ளது. போராட்டம் குறித்த செய்திகளை அவ்வப்போது தெரிவிக்க மூன்று டவர்கள் கொண்ட நவீனதொழில்நுட்ப மீடியா செண்டரும் உள்ளது.
எல்லா மருத்துவ வசதிகளையும் கொண்ட ஐ.சி.யு மைதானத்தில் உள்ளது.ஐம்பது ஆம்புலன்சுகள் உள்ளன.ஈவண்ட் மேனேஜ்மெண்ட் குழுமமும், ஆயிரம் வாலண்டியர்களும் உள்ளனர்.இதில் பெரும்பாலோர் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைப்பை சார்ந்தவர்களாவர்.
ஆனால், ராம்தேவ் ஒருமாதம் முன்பு 5000 பேர் பங்கேற்கும் யோகா முகாம் நடத்த ஜூன் ஒன்றாம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை ராம் லீலா மைதானத்தை முன்பதிவு செய்துள்ளார். மாநிலத்திற்கு வெளியே இருந்து வருபவர்களுக்கு நடத்தும் யோகா முகாம் எனவும், முகாம் முடியும் வரை அவர்கள் இங்கு தங்கியிருப்பார்கள் என தெரிவித்ததாக டெல்லி செண்ட்ரல் மாவட்ட துணை போலீஸ் கமிஷனர் விவேக் கிஷோர் அறிவித்துள்ளார். ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி கோரியபோதிலும் டெல்லி போலீஸ் மறுத்துவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக