வியாழன், ஜூன் 16, 2011

மலேசிய அரசாங்க இணையத் தளங்களை அடையாளம் தெரியாதவர்கள் முடக்கியுள்ளனர்...

16-6-11, பதிப்புரிமைச் சட்டங்களை (copy right) மீறியதற்காக 10 இணையத் தளங்கள் தடுக்கப்படுவதாக எம்சிஎம்சி என்ற மலேசிய பல்லூடக தொடர்பு ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து அரசாங்க இணையத் தளங்களை இன்று தொடக்கம் தாக்கப் போவதாக அடையாளம் தெரியாதவர்கள் எச்சரித்தனர்.

நேற்று பின்னேரத்திலிருந்து 10 அரசாங்க அமைப்புக்களின் இணையத் தளங்களைத் திறக்க முடியவில்லை. அதற்கு அடையாளம் தெரியாதவர்கள் மேற்கொண்ட தாக்குதல் காரணம் எனக் கருதப்படுகிறது.

கோப்புக்களைப் பகிர்ந்து கொள்ளும் இணையத் தளங்களை மூடுவது என் அரசாங்கம் முடிவு செய்ததற்கு பதிலடியாக அடையாளம் தெரியாதவர்கள் அவ்வாறு செய்துள்ளனர்.


இணையத் தள நிர்வாகி நிறுத்தி வைத்துள்ள அல்லது விநியோகச் சேவை மறுக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட 18 அரசாங்க இணையத்தளங்கள் பட்டியலை நேற்றிரவு அந்த ‘அடையாளம் தெரியாதவர்கள்’ என தங்களை அழைத்துக் கொள்ளும் இணைய கொள்ளையர்கள் வெளியிட்டனர்.

இன்று காலை 7 மணி அளவில் சோதனை செய்த போது மலேசிய அரசாங்கத்தின் தலையாய இணையத் தளமான மை கவர்ன்மெண்ட் (www.malaysia.gov.my) உட்பட குறைந்தது 9 இணையத் தளங்களுக்கு இன்னும் செல்ல முடியவில்லை.

சபா சுற்றுலாத் துறை, ஆசியான் கனக்ட், தீயணைப்பு மீட்புத் துறை கருவூலம், நாடாளுமன்றம், மலேசியா வேலைகள், தகவல், கலை பண்பாட்டு அமைச்சு, தேசிய விளையாட்டு மன்றம் ஆகியவை மற்ற இணையத் தளங்களாகும்.
மலேசிய கட்டுமானத் தொழில் வாரியத்தின் அதிகாரத்துவ இணையத் தளமும் நேற்றிரவு அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“மலேசிய அரசாங்கம் எடுத்துள்ள தணிக்கை முறையை நாங்கள் பார்த்தோம். விக்கிலீக்ஸ், பயரட் பே போன்ற தளங்கள் தடுக்கப்பட்டுள்ளன. மலேசிய அரசாங்கம் உலகில் மிகவும் கடுமையான அரசாங்களில் ஒன்றாகும். அது திரைப்படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் கூட தடுக்கிறது.”

“அந்தத் தணிக்கையை மன்னிக்க முடியாது. அடிப்படை மனித உரிமையை நீங்கள் பறித்துக் கொண்டுள்ளீர்கள். இணையம் என்பது அரசாங்கத் தலையீடு இல்லாத சுதந்திரமாகும். யாரும் கவனிக்க மாட்டார்கள் என எண்ண வேண்டாம்”, என  அடையாளம் இல்லாதவர்கள் விடுத்த அறிக்கை கூறியது.

கட்டுமான வாரியத்தின் இணையத் தளம் இன்று காலை 7 மணி அளவில் மீட்கப்பட்டது.
malaysiakini

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக