புதன், ஜூன் 01, 2011

சன் டி.வியின் 700 கோடி ரூபாய் ஊழல்:டெஹல்கா

, புதுடெல்லி: அது குற்றமென்றால் இது என்ன? எனக் கேள்வி எழுப்புகிறது ஆங்கில புலனாய்வு இதழான தெஹல்கா.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் திகார் சிறையில் உள்ள ஆ.ராசா மீது சி.பி.ஐ. சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளில் முக்கியமானவை,

2001ஆம் ஆண்டுக்கான விலையிலேயே அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது என்பதும்,

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பதும்தான்.

இந்த நடைமுறை,  ஆ.ராசா வுக்கு முன் தகவல் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் காலத்திலும் நடைமுறையில் இருந்தது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக 2001ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டுவரை என்ன நடந்தது என்று விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட

நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையிலான குழு அறிக்கை அளித்துள்ளது.
இதில் ஒதுக்கீட்டு விதிமுறைகளை பல முறை தயாநிதி மாறன் மீறியிருக்கிறார்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது போன்ற ஒரு விதிமீறல்களால் தயாநிதியின் சகோதரர் கலாநிதி மாறனின் சன் டி.வி. நிர்வாகம் 700 கோடி ரூபாய் பலனடைந்திருப்பது பற்றிய செய்தியை தெஹல்கா வெளியிட்டுள்ளது.

அதுபோல் 2004 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா ஆட்சி நடந்த போது, தகவல் தொடர்புத்துறை அமைச்சராக அருண்ஷோரி இருந்தார். இவர் டிஷ்நெட் ஒயர்லெஸ் லிமிட்டெட் (ஏர்செல்) உட்பட பல நிறுவனங்களுக்கு முறைகேடாக காற்றலை ஒதுக்கீடு செய்தார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆ.ராசாவுக்கு பின்னால் ஐ.மு.கூட்டணி அரசின் இடம்பெற்றுள்ள தி.மு.க அமைச்சர் தயாநிதிமாறன் மீது ஊழல் புகார் எழுந்துள்ளது. டெலிகாம் நிறுவனமான ஏர்செல்லிற்கு 14 யூனிஃபைட் ஆக்ஸஸ் லைசன்ஸ்(யு.எ.எஸ்.எல்) அளித்ததற்கு பிரதி உபகாரமாக மாறன் குடும்பத்தினரின் சன் டி.விக்கு 700 கோடி ரூபாய் அளிக்கப்பட்டது என டெஹல்கா மாத இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய ஜவுளி அமைச்சர் தயாநிதி மாறனுக்கு எதிராக எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டு மத்திய அரசை மேலும் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் கலைஞர் டி.விக்கு கிடைத்த ஊழல் பணமான 200 கோடி ரூபாய்க்கு மூன்று மடங்கு சன் டி.விக்கு கிடைத்துள்ளது.
2006-ஆம் ஆண்டு தயாநிதிமாறன் டெலிகாம் அமைச்சராக பதவி வகிக்கும் வேளையில் ஏர்செல்லிற்கு 14 வட்டாரங்களில் யு.எ.எஸ்.எல் லைசன்ஸ் வழங்கியுள்ளார். இத்துடன் ஏர்செல் நாட்டின் ஏழாவது டெலிகாம் நிறுவனமாக வளர்ச்சியடைந்தது.
லைசன்ஸிற்காக ஏர்செல் வழங்கியது வெறும் 1399 கோடி ரூபாய் ஆகும்.மலேசியாவைச்சார்ந்த தொழிலதிபர் டி.அனந்தகிருஷ்ணனின் மாக்ஸிஸ் குழுமம் ஏர்செல்லின் 74 சதவீத பங்குகளை சொந்தமாக்கிய பிறகு இந்த ஒதுக்கீடு நடந்துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் கம்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல் ஆஃப் இந்தியா(C.A.G)வின் மதிப்பீட்டின் அடிப்படையில் கணக்கிட்டால் 22 ஆயிரம் கோடி ரூபாய் விலை மதிப்புடைய லைசென்ஸ் வெறும் 1399 கோடி ரூபாய்க்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதி உபகாரமாக ஏர்செல்லின் உரிமையாளர் அனந்தகிருஷ்ணன் தனக்கு சொந்தமான சவுத் ஆசியா எண்டெர்டெயின்மெண்ட் ஹோல்டிங் லிமிட்டட்(எஸ்.எ.இ.ஹெச்.எல்) என்ற நிறுவனத்தின் மூலமாக 15 கோடி டாலர்(600 கோடி இந்திய ரூபாய்) சன் டைரக்ட் டி.வி ப்ரைவட் லிமிட்டடிற்கு அளித்துள்ளார்.
தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதிமாறன் அவரின் மனைவி காவேரி மாறன் ஆகியோருக்கு சொந்தமானதுதான் சன் டைரக்ட்.2008 பெப்ருவரி 2009 ஜூலை இடையே மாறன் குடும்பத்தின் மற்றொரு நிறுவனமான சன் எஃப்.எம் ரேடியோவின் கட்டுப்பாட்டில் உள்ள சவுத் ஏசியா எஃப்.எம் லிமிட்டடிற்கு 100 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
முன்னர் ஏர்செல் ஸ்டெர்லிங் இன்ஃபோடெக் குழுமத்திற்கு(தற்போதைய சிவா குழுமம்) சொந்தமாக இருந்த வேளையில் மாறனால் நிராகரிக்கப்பட்ட லைசென்ஸ் அனந்த கிருஷ்ணன் வசம் ஏர்செல் வந்தபொழுது மாறனால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
2001 முதல் 2009 வரையிலான டெலிகாம் லைசன்ஸ் விநியோகத்தின் நடவடிக்கைகளை பரிசோதித்த நீதிபதி சிவராஜ் பாட்டீல் கமிட்டி ஏர்செல்லிற்கு லைசன்ஸ் வழங்கிய நடவடிக்கையை குற்றம் சாட்டியிருந்தது.சட்டவிரோதமான பொருத்தமற்றவைகள் நிறைந்த நடவடிக்கை என இது தொடர்பாக பாட்டீல் அறிக்கை கூறுகிறது.
டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய புலனாய்வுக் கழகத்தின் (சிபிஐ) செய்தி தொடர்பாளர் தாரிணி மிஸ்ரா, “2001 முதல் 2007ஆம் ஆண்டு வரை 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான விவரங்களை சி.பி.ஐ தீவிரமாக ஆராய்ந்து வருகிறது” என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே லஞ்சமாக பெற்ற பணத்தை திருப்பி அடைத்தபிறகும் கலைஞர் டி.வியின் இயக்குநரான கனிமொழி எம்.பியை சி.பி.ஐ கைது செய்துள்ளது.ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டவர்கள் சிறையில் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட சூழலில் புதிதாக தயாநிதி மாறனின் ஊழல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக