புதன், ஜூன் 01, 2011

ஓநாய்களின் பள்ளத்தாக்கு’-பலஸ்தீன் திரைப்படம்..

ஓநாய்களின் பள்ளத்தாக்கு’- பலஸ்தீன் என்ற திரைப்படம் மேலும் இஸ்ரேலுக்கு பலத்த அடி ஐந்து ஆண்டுகள் இஸ்ரேலிய முற்றுகைக்குல் வதைக்கப்படும் காஸா மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக சென்ற துருக்கி கப்பல்கள் மீது இஸ்ரேல் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலை சித்தரிக்கும் ‘ஓநாய்களின் பள்ளத்தாக்கு’- பலஸ்தீன் என்ற பெயரில் துருக்கியில் ஒரு இராணுவ தாக்குதல் திரைப்படம் தயாரிக்கப்படுள்ளது.

 இந்த பெயரில் ஏற்கனவே தொலைக்காட்சி தொடர் ஒன்று துருக்கியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளதுடன் அந்த தொலைக்காட்சி தொடர் துருக்கி இஸ்ரேல் உறவில் மேலும் பல விரிசல்களை ஏற்படுத்தியுள்ளதாக துருக்கிய செய்திகள் தெரிவிக்கின்றன இந்த கப்பலில் இலங்கையை சேர்ந்த இரு மாணவர்கள் படுகாயம் அடைந்தமை குறிபிடத்தக்கது

One Man Army, Spy operation போன்ற இராணுவ முறைகளை கையாண்டு துருக்கி எதிரிகளை வேட்டையாடுவது இதில் சிதரிக்கபடுகின்றது சிறப்பு காட்சியாக ஒன்பது துருக்கி நாட்டு முஸ்லிம்களை படுகொலை செய்த flotilla கப்பல் தாக்குதலுக்கு உத்தரவிட்ட இஸ்ரேலிய கொமாண்டோ தலைவர் கொல்லப்படும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது மற்றும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பாலர்களை பலஸ்தீனின் ஓநாய்கள் என்று வர்ணித்து பெயர் சூட்டியுள்ளமையும் சிறப்பானதாக துருக்கிய மக்கள் தெரிவிக்கின்றனர்.

See the full movie with English Subtitles..

ஓநாய்களின் பள்ளத்தாக்கு’-பலஸ்தீன் திரைப்படம் துருக்கி நாட்டுக்கும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அதிகார சபைக்கும் ஏற்பட்டுள்ள முறுகலை தவிர்க்க அமெரிக்கா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பலத்த அடியாகும் என விமர்சிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக