உலகை அச்சுறுத்தி வரும் இ-கோலி பாக்டீரியாவால், ஐரோப்பாவில் பிரச்னை கிளம்பியுள்ளது. இதுவரை 17 பேரை பலி வாங்கியுள்ள இந்த பாக்டீரியாவால், உலக நாடுகளிடையே அதிருப்தி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இ.கோலி பாக்டீரியா இந்தியாவில் பரவாமல் தடுக்க உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இ.கோலி எனப்படும் உயிர்கொல்லி பாக்டீரியா நோய் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வரும் இந்நோய்க்கு இதுவரை 1700 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
உணவு பொருட்கள் மூலமாக பரவும் இந்த பாக்டீரியா ஹீமோலிடிக் எரெமிக் சின்ட்ரோம் எனும் சிறுநீரக கோளாறை ஏற்படுத்துகிறது.
இதனையடுத்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் உணவு தரக்கட்டுப்பாட்டுத் துறையானது எச்சரிக்கை குறிப்பு விடுத்துளது.
நாட்டின் 5 பெரிய துறைமுகங்கள் மற்றும் 4 முக்கிய விமான நிலையங்களில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்து இறங்கும் காய்கறி, பழங்கள் போன்ற பொருட்கள் ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா, ஹல்டியா, மும்பை, சென்னை துறைமுகங்கள், டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா விமான நிலையங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்நோய்க் கிருமி பாதிப்பால் ஐரோப்பாவில் 17 பேர் இறந்துள்ளனர்.
இ.கோலி பாக்டீரியா காஸ்ட்ரோகுன்டஸ்டைனல் டிராக்டில் இருக்கும் ஒரு ரக பாக்டீரியா. ஆனால் இந்த கிருமி உற்பத்தி செய்யும் ஒரு வித நச்சு காரணமாக உடலில் பெரும் பாதிப்பு ஏற்படும் சுத்திகரிக்கப்படாத தண்ணீர், தரமற்ற உணவு ஆகியனவற்றை உண்பதால் இந்நோய் தாக்கக்கூடும் என தெரிகிறது.
எனவே இந்நோய் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் முன் தடுப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஆஸ்திரியா, டென்மார்க், பிரான்ஸ், நெதர்லாந்து, நார்வே, ஸ்பெயின், ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாட்டு மக்களும், இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பாக்டீரியா அதிக ஆபத்தில்லாதது எனக் கூறப்படுகிறது. ஆனால், இது உமிழும் எச்சம் குடலின் உட்பகுதியில் படிந்து, விசத்தைப் பரப்பி, உடலை பாதிக்கிறது. இதை நீக்க, இன்னும் மருந்து கண்டறியப்படவில்லை.
ஐரோப்பாவில் இந்நோய் பரவி இருப்பதையடுத்து ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்து, பச்சைக் காய்கறிகளை, குறிப்பாக வெள்ளரிக்காயை இறக்குமதி செய்ய, ரஷ்யா தடை விதித்துள்ளது. இதற்கு ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக