புதுடெல்லி:பீகார் மாநிலம் போர்ப்ஸ்கஞ்ச் மாவட்டத்தில் இரண்டு முஸ்லிம் கிராமங்கள் இடையேயான சாலையை ஆக்கிரமிக்க நடந்த முயற்சியை எதிர்த்து போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் மீது ஈவு இரக்கமின்றி 6 மாத குழந்தை உள்பட 6 பேரை சுட்டுக் கொன்றதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகளை உடனடியாக தண்டிக்குமாறு சிவில் உரிமை சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.
நேற்று (திங்கள் கிழமை) பீகார் பவனுக்கு முன்னால் போர்ப்ஸ் கஞ்ச் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு நீதிக்கிடைக்க கோரும் குழு (Committee for Justice to Forbesganj Police Firing Victims (CJFPFV)) என்ற பேனரில் சிவில் சமூக உறுப்பினர்கள் அப்பட்டமான மனித உரிமை மீறலுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டத்தில் சிவில் சமூகத்தை சார்ந்த மெஹ்தாப் ஆலம், மனீஷா சேதி ஆகியோர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக