செவ்வாய், ஜூன் 21, 2011

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது,

Aseemanand_Othe8599, பஞ்ச்குலா(ஹரியானா): தீவிர ஹிந்துத்துவா பயங்கரவாதியான சுவாமி அஸிமானந்தா உள்ளிட்ட ஐந்துபேர் மீது சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) குற்றப்பத்திரிகை சமர்ப்பித்துள்ளது.
மூளையாக செயல்பட்ட அஸிமானந்தா பயங்கரவாத செயல்களை புரிய பிறரை தூண்டியதாக செசன்ஸ் நீதிபதி காஞ்சன் மஹி முன்பாக சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் அபினவ்பாரத் ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் பிரக்யாசிங் தாக்கூரின் பங்கினைக்குறித்து விசாரிக்கவேண்டியுள்ளது எனவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ வழக்கறிஞர் அஹ்மத்கான் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.ஹரியானா மாநிலம் பானிப்பட் அருகில் கடந்த 2007-ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் நடந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் ஏராளமான பாகிஸ்தான் குடிமக்கள் உள்பட 68 பேர் கொல்லப்பட்டனர்.

ஹிந்துத்துவ பயங்கரவாதிகளும், இதர குண்டுவெடிப்புகளில் குற்றவாளிகளுமான லோகேஷ் சர்மா, சந்தீப் டாங்கே, ராம்சந்திர கல்சங்க்ரா என்ற ராம்ஜி, சுனில் ஜோஷி ஆகியோரின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.இதில் சுனில்ஜோஷி மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.லோகேஷ் சர்மா நீதிமன்ற காவலில் உள்ளார்.சந்தீப் டாங்கே, ராம்சந்திர கல்சங்க்ரா ஆகியோர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.2007-ஆம் ஆண்டு மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி ஹரித்துவாரில் வைத்து சி.பி.ஐ கைதுச்செய்த அபினவ் பாரத்தின் ஆன்மீக தலைவராக கருதப்படும் அஸிமானந்தா தற்போது அம்பாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.சிறையில் இருக்கும் வேளையில் தனக்கும், சங்க்பரிவார உயர்மட்டத்தலைவர்களுக்கும் இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புக்குறித்து சி.பி.ஐயிடம் அஸிமானந்தா ஒப்புக்கொண்டார்.
சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை சமர்ப்பித்தது பாகிஸ்தானிடம் தெரிவிக்கப்படும் எனவும், குற்றப்பத்திரிகை தொடர்பான விவகாரங்கள் குறித்து வெளியுறவு செயலாளர் மட்டத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பகிர்ந்துக்கொள்ளப்படும் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மும்பை தாக்குதல் வழக்கில் குற்றவாளிகளை பாகிஸ்தான் கவனிக்கும் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக