புதுடில்லி: டில்லி மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த யோகாகுரு பெண்கள் உடையில் தப்பி செல்ல முற்பட்டார். ஆனாலும் போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். மைதானத்தில் போலீஸ் குவிக்கப்பட்டதும், ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நேரத்தில் மேடையில் இருந்து குதித்து கூட்டத்தினருடன் சேர்ந்து கொண்டார்.
பின்னர் பெண் தொண்டர்களின் சுடிதார், அணிந்து துப்பட்டாவை போர்த்தியபடி மாறு வேடத்தில் தப்பினார். ஆனால் போலீசார் இதையும் மோப்பம் பிடித்து யோகாகுருவை பிடித்து விட்டனர். டேரா டூனுக்கு செல்லும்போது வெள்ளை துணி அணிந்திருந்தார். இவர் அளித்துள்ள பேட்டியில் எனது உயிரை காப்பாற்ற பெண் தொண்டர்கள் பெரிதும் உதவியாக இருந்தனர் இவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றும் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக