வெள்ளி, ஜூன் 24, 2011

சம்ஜோதா:குண்டுவெடிப்பில் பங்கு நிரூபிக்கப்பட்ட பிறகும் குற்றவாளியாக சேர்க்கப்படாத ஆர்.எஸ்.எஸ் தலைவர்

indresh kumar, புதுடெல்லி:இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடந்த ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் சதித்திட்டங்களில் பங்கேற்று நிதியுதவி அளித்ததாக விசாரணையில் நிரூபணமான பிறகும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் இந்திரேஷ்குமார் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை..
சுவாமி அஸிமானந்தா உள்ளிட்ட ஐந்து நபர்களை குற்றவாளிகளாக சேர்த்து தேசிய புலனாய்வு ஏஜன்சி (என்.ஐ.ஏ) நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ் குமாரின் பெயர் விமர்சிக்கப்படுகிறது. பயங்கரவாத செயல்களை குறித்து சதித்திட்டம் தீட்ட சபரிடாமில் நடத்திய ரகசிய கூட்டத்தில் அஸிமானந்தா மற்றும் சுனில் ஜோஷியுடன் இந்திரேஷ் குமாரும் பங்கேற்றுள்ளார்.
சம்ஜோத எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு உள்ளிட்ட குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதற்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியை அஸிமானந்தா-சுனில்ஜோஷி கும்பலுக்கு இந்திரேஷ் குமார் அளித்தார் என்பதும் குற்றப்பத்திரிகையில் கூறப்படுகிறது. ஆனால் இவ்வழக்கில் அவர் குற்றவாளி இல்லை.

குற்றப்பத்திரிகையில் ஆர்.எஸ்.எஸ் தலைவரை சேர்த்தால் அரசியல் எதிர்விளைவுகள் ஏற்படும் என உள்துறை அமைச்சகம் அஞ்சுகிறது. அதனால், குற்றவாளிகளின் வாக்கு மூலமும், சூழ்நிலை ஆதாரங்களும் இருந்த பிறகும் கூட இந்திரேஷ் குமாரிடம் என்.ஐ.ஏ விசாரணை நடத்தவில்லை. முன்னர் ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் இவரை சி.பி.ஐ விசாரணை செய்ததை என்.ஐ.ஏ புறக்கணித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளில் பங்கு வெளியான சூழலில் அவ்வமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராம்மாதவ் பிரதமர் அலுவலகத்திற்கு சென்றும் கடிதம் அளித்தது குறிப்பிடத்தக்கதாகும். காங்கிரஸ் கட்சியி பொதுசெயலாளர் திக்விஜய்சிங் அடிக்கடி ஆர்.எஸ்.எஸ்ஸை குற்றஞ்சாட்டுவது தான் மிச்சம்.
இந்தியா முழுவதும் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் இந்திரேஷ் குமாரின் பங்கு வெளியான பிறகும் அவர் மீது கை வைக்க காங்கிரஸ் அஞ்சுவது அக்கட்சியின் பகிரங்கமான இரட்டை வேடமாகும். அற்பமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து முஸ்லிம் இளைஞர்களை பல ஆண்டுகளாக அநீதமாக சிறையில் அடைக்கும் அரசு மிகப்பெரிய பயங்கரவாதியை நடமாடவிட்டுள்ளதன் மூலம் இவர்களுக்கு நாட்டின் பாதுகாப்பைக் குறித்தோ, நீதியை குறித்தோ எவ்வித அக்கறையுமில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது
thoothu online

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக