வெள்ளி, மே 27, 2011

Rafah எல்லையை மீண்டும் நிரந்தரமாக திறந்தது எகிப்து - காஸா மக்கள் மகிழ்ச்சி

காஸா வுக்குள் நுழைவதற்கான Rafah எல்லை நுழைவாயிலை மீண்டும் திறந்துவிடப்போவதாக எகிப்து அறிவித்துள்ளது. வரும் சனிக்கிழமை முதல் நிரந்தரமாக இந்த எல்லையை திறந்துவிடப்போவதாக தெரிவித்துள்ள எகிப்தின் புதிய இராணுவ அரசு இது பாலஸ்தீன ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களுடன் மீண்டும் தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்க உதவும் என க்கூறியுள்ளது.

இதை தொடர்ந்து வெள்ளிக்கிழமை, விடுமுறை தினங்களை தவிர, ஏனைய அனைத்து நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 9 மணிவரை இந்நுழைவாயில் திறந்திருக்கவுள்ளது.

துன்பத்திலிருக்கும் காஸாமக்களின் விடிவுக்காகவும், அவர்களது வாழ்க்கைநடைமுறையை இலகுவாக்கவும் இந்த பாதை திறந்துவிடப்பட்டுள்ளதாக எகிப்திய வெளியுறவுத்துறை பேச்சாளர் மின்ஹா பாக்ஹும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் நேரடித்தலையீடின்றி, காஸாவுக்குள் சென்றுவருவதற்காக ஒரே ஒரு நுழைவாயிலாக இருந்த Rafah எல்லை, நான்கு வருடங்களாக மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக