இலங்கை சிறார்கள் |
இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 2 லட்சம் சிறார்கள் பள்ளிக்கூட படிப்பை கைவிடுவதாக இலங்கை சிறார் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை அதிகார சபை தெரிவித்துள்ளது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் 10 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கையின் மகளிர் மற்றும் சிறார் நலத்துறை இணை அமைச்சரான ஹிஸ்புல்லா, இந்த பாதிப்பு வடக்கு,கிழக்கு, மலையகம் மற்றும் ஊவா மாகாணங்களில் அதிகம் காணப்படுவதாகவும், யுத்தம், வறுமை மற்றும் பொருளாதார பிரச்சனைகளால் இது ஏற்படுகிறது என்றும் கூறினார்.
இந்த நிலையை நீக்க யூனிசெப் அமைப்போடு இணைந்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்தோடு பெண்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது இலங்கையிலேயே இருக்கும் அவர்களின் குழந்தைகளுக்கு சரியான கவனிப்பு இல்லாத சூழ்நிலை காணப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர், இது குறித்து தமது அமைச்சகத்துக்கு அறிவித்தால் தங்கள் அலுவலர்கள் குழந்தைகளின் நலனை உறுதி செய்ய நடவடிக்கையை மேற்கொள்வார்கள் என்றும் கூறினார்.
bbc
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக