அஹ்மதாபாத்: துளசிராம் பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்கை விசாரிக்கும் பொறுப்பை மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐ ஏற்றுக்கொண்டது.
சி.பி.ஐயின் மும்பை அலுவலகம் இது தொடர்பான புதிய வழக்கை பதிவுச்செய்துள்ளது. பிரஜாபதி போலி என்கவுண்டர் தொடர்பாக புதிய வழக்கை பதிவு செய்துள்ளதாக சி.பி.ஐ, ஐ.ஜி கந்தசாமி கூறினார்.
சொஹ்ரபுத்தீன் ஷேக் அவரது மனைவி கவ்ஸர்பீ ஆகியோரின் கொலை வழக்குகளில் முக்கிய சாட்சியாக இருந்த பிரஜாபதியின் போலி என்கவுண்டர் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் இம்மாதம் எட்டாம் தேதி உத்தரவிட்டது.
பிரஜாபதியைன் தயார் நர்மதாபாய் தொடுத்த வழக்கை தொடர்ந்து இந்த உத்தரவை பிறப்பித்தது உச்ச நீதிமன்றம். இரட்டைப் படுகொலைக்கு சாட்சியாக மாறியதால் தனது மகனை குஜராத் போலீஸ் சுட்டுக்கொன்றதாக நர்மதாபாய் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
சொஹ்ரபுத்தீன் போலி என்கவுண்டர் கொலை வழக்கில் குற்றவாளிகளான டி.ஜி.வன்ஸாரா, ராஜ்குமார் பாண்டியன், தினேஷ் எம்.என் ஆகிய ஐ.பி.எஸ் அதிகாரிகள் பிரஜாபதி கொலை வழக்கிலும் குற்றவாளிகளாவர். இவ்வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு குஜராத் அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக