சனி, மே 14, 2011

பாப்ரி மஸ்ஜித் பிரச்சனைக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காண முடியாது- சங்கராச்சாரியார்.

May 14, சேலம்: சேலத்தில் உள்ள சங்கரமடத்திற்கு பக்தர்களுக்கு ஆசி(?) வழங்கவந்தார்  சங்கரராமன் கொலை புகழ் சங்கராச்சாரியார்.

பாப்ரி மஸ்ஜித் பிரச்சனைக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காண முடியாது என நிருபர்களிடம் பேட்டியளித்துள்ளார்.

சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கியதால் வண்டவாளங்கள் எல்லாம் வெளியாகி சீரழிந்தவர் தாம் சங்கராச்சாரி.

ஆன்மீகப் போர்வையில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு சேவை செய்வது வரும் சங்கராச்சாரி பாலியல் தொடர்பான அசிங்கங்களிலும் பெரும் கில்லாடியாவார்.

பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் முன்பே சமாதானப் பேச்சு என்ற பெயரில் நாடகமாடி தலையிட்டுவருகிறார்.

சில புறம் போக்குகளை கையில் பிடித்துக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் ஏஜண்டாக மாறி முஸ்லிம்கள் பாப்ரி மஸ்ஜிதை விட்டுக் கொடுக்க தயாராகி விட்டதாக கதையளந்துள்ளார்.


சங்கராச்சாரியின் பார்வையில் சுமூக தீர்வு என்பதே பாப்ரி மஸ்ஜிதை முஸ்லிம்கள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு தாரை வார்க்க வேண்டுமென்பதே!

உ.பி.மாநில சுன்னி வக்ஃப்போர்டு உச்ச நீதிமன்றத்தில் அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது.

உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை ஏற்றுக் கொண்டு விசாரணைக்கு எடுத்து முந்தைய அலகாபாத் உயர் நீதிமன்ற கட்டப்பஞ்சாயத்து தீர்ப்புக் குறித்து விசித்திரமான விந்தையான தீர்ப்பு என கருத்து தெரிவித்துள்ளது.

நிலையில் சுன்னி வக்ஃபோர்டு சமாதானத்திற்கு தயாரானதாக பொய்களை புழுகியுள்ளார் சங்கராச்சாரி. பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் பிரதிகள் உறுப்பினர்களாக செயல்படும் முஸ்லிம் தனியார் சட்டவாரியம் பாப்ரி மஸ்ஜித் நில உரிமையியல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடுவது என முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில் சங்கராச்சாரியுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த முஸ்லிம்கள் முன்வந்தார்கள் என தெரியவில்லை. சமாதானம் என்ற பெயரில் பாப்ரி மஸ்ஜித் நிலத்தை களவாட திட்டமிடும் சங்கராச்சாரி போன்ற ஒழுக்கங்கெட்ட ஆன்மீக கயவர்களிடம் முஸ்லிம்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக