சனி, மே 14, 2011

மாற்று அரசியலுக்கு இந்த தேர்தல் ஊக்கத்தை தந்துள்ளது- இ. அபூபக்கர்..

May 14, கேரளா தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற தேர்தலில் ஆட்சியாளர்களுக்கு எதிரான அதிருப்தி முக்கிய காரணியாக பங்காற்றியுள்ளது.

என்று சோசியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின் தலைவர் இ அபூபக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த மாநிலங்களில், மக்கள் தேர்ந்தெடுக்க ஊழல் பாரம்பர்யமிக்க ஒரே விளைவை ஏற்படுத்தக்கூடிய இரு கூட்டணிகள் மட்டுமே இருக்கிறது.

ஆளுங்கட்சிக்கேதிராக எதிர்கட்சிக்கு மாறி மாறி வாக்களிப்பது என்பது அரசியல் பாரம்பர்யத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக இல்லை.

தற்போதுள்ள அரசியல் அமைப்பில் தங்களுடைய உடனடி எதிரியாக அவர்கள் கருதும் ஆளுங்கட்சியை வீழ்த்த தகுதியான கூட்டணிக்கே வாக்களித்து அதிருப்தியை தெரிவிப்பதை தவிர இந்த குடிமக்களுக்கு வேறு வழியில்லை .

துரதிர்ஷ்டவசமாக இதுவே தமிழகத்திலும் கேரளாவிலும் ஒவ்வொரு தேர்தலிலும் மாறி மாறி ஏற்படுகிறது. கேரளாவில் காங்கிரஸ் கூட்டணிக்கோ அல்லது கம்யூனிஸ்ட் கூட்டணிக்கோ மக்கள் அருதிப்பெரும்பான்மையாக வாக்களித்து வெற்றி பெற வைக்காமல் இருப்பதே மாற்று அணி உருவாக்க வழிவகுக்கிறது.


மேற்கு வங்காளத்தில் தங்களுக்கு பெரும் சுமையாக இருந்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டை வாக்காளர்கள் தூக்கி எறிய வாய்ப்பை எதிர்பார்த்து இதுவரை காத்திருந்தனர்.
கேரளா தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் கூட்டணிகள் அமைக்காமல் தனியாக களமிறக்கப்பட்டிருந்த சோசியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா வேட்பாளர்கள் வெற்றி பெறாவிட்டாலும் இந்த மாநிலங்களில் சுமார் நூற்றி ஒரு 101 தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளனர்.

ஒரு சில தொகுதிகளில் கட்சி பெற்றுள்ள வாக்குக்கள் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யும் வாக்குகளாக அமைந்துள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். SDPI பொருத்தமட்டில் இது முதல் சோதனை முயற்சி. பசியிலிருந்தும் பயத்திலிருந்தும் விடுதலை பெரும் நமது நேர்மறையான மாற்று அரசியலுக்கு பலத்தையும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் இந்த தேர்தல் முடிவுகள் தந்துள்ளது என இ அபூபக்கர் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இந்த தேர்தலில் ஆதரவளித்த அனைத்து கட்சிகளுக்கும் கட்சி செயல்வீரர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் கேரள மாநிலத் தலைவராக நஸ்ருதீன் எழமரம் கோழிக்கோட்டில் நடந்த மாநில செயற்குழுக் கூட்டத்தில் நடந்த தேர்தலில் தேர்வுச் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது எஸ்.டி.பி.ஐயின் தேசிய செயற்குழு உறுப்பினராக பதவி வகிக்கும் நாஸருத்தீன் கட்சியின் மாநில தலைமைச்செயலக உறுப்பினராகவும் பதவி வகிக்கிறார். தனிப்பட்ட காரணங்களால் வழக்கறிஞர் கெ.பி.முஹம்மது ஷெரீஃப் தலைவர் பதவியிலிருந்து விலகியதைத்தொடர்ந்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. தேசிய செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் கோயா தேர்தலை நடத்தினார்.

இத்தேர்தலுக்கு தலைவர் வழக்கறிஞர் கே.பி.முஹம்மது ஷெரீஃப் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர்களான எம்.கே.மனோஜ்குமார், அப்துல்மஜீத் ஃபைஸி, துணைத் தலைவர்களான முவாற்றுப்புழா மெளலவி அஷ்ரஃப், அய்யப்பன் மாஸ்டர், பொருளாளர் சேம்குட்டி ஜேக்கப், வி.டி. இக்ராமுல் ஹக், நூர்ஜஹான், துளசீதரன் ஆகியோர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக