வெள்ளி, மே 06, 2011

பாதுகாப்பு படையா? அல்லது பயங்கரவாத படையா?

May , இந்திய‌ பாதுகாப்பு ப‌டை தாண்டேவாடா மாவ‌ட்ட‌த்தின் வனப்பகுதியின் உள்ளே உள்ள‌ மூன்று கிராம‌ங்க‌ளை முற்றிலுமாக‌ தீவைத்து கொளுத்தியுள்ள‌து. இதில் மொத்த‌ம் முன்னூறு குடிசைக‌ள் எறிந்து சாம்ப‌லாயின‌.

நூற்றுக்க‌ண‌க்கான‌ ப‌ழ‌ங்குடி ம‌க்க‌ள் வீடிழ‌ந்தார்க‌ள். மூன்று பெண்க‌ள் பாலிய‌ல் வ‌ன்புண‌ர்வுக்கு உள்ளாக்க‌ப்ப‌ட்டுள்ளார்க‌ள். மூன்று ப‌ழ‌ங்குடியின‌ ம‌க்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்டுள்ளார்க‌ள்.

ப‌ழ‌ங்குடிக‌ளின் தானிய‌ சேமிப்புக‌ள் எல்லாம் தீக்கிறைக்கப்பட்டுள்ள‌ன‌. ப‌ழ‌ங்குடிக‌ள் சேமித்து வைத்திருந்த‌ த‌ங்க‌ ந‌கைக‌ள், ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ரூபாய்க‌ள் கொள்ளைய‌டிக்க‌ப் பட்டுள்ள‌‌ன‌.

கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஒருவ‌ரின் உட‌ல் ஒரு ம‌ர‌த்தில் தொங்க‌விட‌ப்ப‌ட்டும், ம‌ற்ற‌ ஒருவ‌ரின் உட‌ல் கோடாரியால் இர‌ண்டாக‌ பிள‌க்க‌ப்ப‌ட்டும் கிட‌ந்த‌து. அவ‌ர்க‌ளின் வாழ்வாதார‌மான‌ கோழி, ஆடு, உண‌வுப் பொருட்களும் கொள்ளைய‌டிக்க‌ப்பட்டுள்ள‌‌ன‌.


இந்த‌ ப‌டுகொலை நிக‌ழ்வுக்கு பின்ன‌ரான‌ மார்ச் இறுதி வார‌ங்க‌ளில் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ கிராம‌ங்க‌ளில் நுழைவ‌த‌ற்கு ப‌ல தனிப்பட்ட விசாரணை குழுக்க‌ளுக்கு த‌டைவிதிக்க‌ப்ப‌ட்ட‌து.
உள்ளூர் ப‌த்திரிகையாள‌ர்க‌ள் ப‌ல‌ர் தாக்க‌ப்பட்டுள்ளார்கள், மேலும் கைது செய்து சிறையில் அடைத்துவிடுவோம் என்று காவ‌ல்துறையால் மிர‌ட்ட‌ப்பட்டு உள்ளார்க‌ள்.

தாண்டேவாடா மாவ‌ட்ட‌ ஆட்சிய‌ர் கொடுத்த‌ நிவார‌ண‌ப் பொருட்க‌ளை ஏற்றிச் சென்ற‌ வாகனத்தின் ஓட்டுநர், சிற‌ப்பு காவ‌ல்துறை அதிகாரியினால் தாக்க‌ப்ப‌ட்டார். பாதுகாப்பு பிர‌ச்ச‌னை என்ற‌ பெய‌ரில் ச‌ட்டீசுக‌ர் மாநில‌ எதிர் க‌ட்சியைச் சேர்ந்த‌ 11 ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ள் இந்த‌ ப‌குதிக்குள் நுழைவ‌த‌ற்கு அனும‌தி ம‌றுக்க‌ப்பட்டுள்ள‌‌து.

ப‌ல‌ வித‌மான‌ இழுத்த‌டிப்புக‌ளுக்கு பின்ன‌ர் வேலை செய்ய‌த்துவ‌ங்கிய‌ மாநில‌ நிர்வாக‌ம் தாண்டேவாடா மாவ‌ட்ட‌ காவல்துறை த‌லைமை அதிகாரி க‌ல்லுரியை இட‌மாற்ற‌ம் செய்து, மேலும் இந்த‌ ப‌டுகொலை தொட‌ர்பான‌ நீதி விசார‌ணை ந‌ட‌க்கும் என்று உத்திர‌வாத‌த்தையும் வ‌ழ‌ங்கியுள்ள‌து.

க‌ட‌ந்த‌ வார‌ம் காவ‌ல்துறையின் அர‌ண்க‌ளை தாண்டி செல்வ‌த‌ற்காக‌ மிக‌வும் தொலைவான‌ காட்டுப்ப‌குதியின் மூல‌மாக‌ பாதிக்க‌ப்ப‌ட்ட‌ கிராம‌ங்க‌ளை தெக‌ல்கா குழுவின‌ர் சென்ற‌டைந்த‌ன‌ர்.

ம‌த்திய‌ காவ‌ல் ப‌டை வீர‌ர்க‌ள், “கோப்ரா”, “கோய” அதிரடி படையைச் சேர்ந்த அதிகாரிக‌ள், காவ‌ல்துறை அதிகாரிக‌ள் எல்லாம் சேர்ந்து தான் இந்த‌ ப‌டுகொலையை நிகழ்த்தினார்கள் என்று நிக‌ழ்வை நேரில் க‌ண்ட‌ சாட்சிக‌ள் எம்மிடம்(தெகல்கா) கூறினார்க‌ள்.

தீ வைத்து கொழுத்த‌ப்ப‌ட்ட‌ மோர்பளி, திமாபுர், தர்மத்லா கிராம‌ங்க‌ள் ம‌யான‌ பூமியைப் போல‌ எங்க‌ளுக்கு காட்சிய‌ளித்த‌ன‌. அந்த‌ நில‌ப்ப‌குதி மொத்த‌‌மும் எரிந்த‌ குடிசைக‌ளையும், ஆள் அரவமற்ற எரிந்து போன தானிய‌ங்க‌ளைக் கொண்ட‌ ப‌ழ‌ங்கால‌ தாழிக‌ளையும் கொண்ட இடிந்து போன வீடுகளையும் மட்டுமே கொண்டிருந்த‌து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக