புதன், மே 18, 2011

பாலஸ்தீனை அங்கீகரிக்க - பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அறைகூவல்

இது சம்பந்தமாக அவர் நியூயார்க் டைம்ஸ் என்ற பத்திரிகையில் எழுதியதாவது :
 இஸ்ரேல் உருவாக்கப்பட்டு மறு கணமே அதற்கு ஐ.நா.சபை அங்கிகாரம் அளித்தது.பலஸ்தீனில் ஒரு யூத நாடு உருவாக அங்கு வாழ்பவர்களின் மனித உரிமையை பற்றி கவலைப்படாமல் அங்கிகாரம் அழித்த ஐ.நா.வாக்களித்தபடி பாலஸ்தீனை ஒரு நாடாக இது வரையிலும் அங்கீகரிக்கவில்லை.இருபது வருடமாக இஸ்ரேலுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தியதில் எந்த பலனும் இல்லை.இஸ்ரேல் தனது குடியிருப்புகளை அதிகரித்து கொண்டுதான் போகிறது.எஞ்சியுள்ள 22 % எங்களுடைய பூர்வீக மன்னிலாவது நாங்கள் அமைதியாக வாழ வழி செய்ய வேண்டும்.

      மேலும் இதுவே பாலஸ்தீன விவகாரத்தில் தீர்வை தரும் எனவும் வருகின்ற செப்டம்பர்,ஐ.நா.வின் பொதுக் குழுவில் இத்தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
    அப்பாஸின் இந்த முயற்சிக்கு அமெரிக்காவும் அதன் கள்ளக் குழந்தை இஸ்ரேலும் எச்சரித்துள்ளன.
      அப்பாஸின் இந்த அறைகூவலுக்கு ஐ.நா.தீர்வு தருமா ?,பொருத்து இருந்து பார்ப்போம். ஆக்கம்-ப்பைசால் ,உதவி -ரயுட்டர்ஸ்,இஸ்லாம் ஆன்லைன்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக