20 May 2011
67-ஆம் ஆண்டிற்கு முந்தைய நிலைமைக்கு பின் செல்லமாட்டோம் என இஸ்ரேல் முன்னரே தெரிவித்துவிட்டது. இதனை அமெரிக்கா அங்கீகரித்துள்ளது. ஃபலஸ்தீன் அகதிகளை மீண்டும் குடியமர்த்துவது ஃபலஸ்தீனிலாகும். மாறாக இஸ்ரேலில் அல்ல-நெதன்யாகு கூறுகிறார். 1967-ஆம் ஆண்டு அரபு போரில் இஸ்ரேல் கைப்பற்றிய மேற்கு கரையில் 3 லட்சம் யூத ஆக்கிரமிப்பாளர்கள் வசிக்கின்றனர். இந்த ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி எல்லைக்கு வெளியே உள்ளது. போருக்கு முந்தைய எல்லையை கணக்கிட்டு எல்லையை கணக்கிட்டு ஃபலஸ்தீன் நாடு உருவாக வேண்டுமென ஒபாமா முன்வைத்த கருத்தாகும். இதன்படி மேற்குகரை ஃபலஸ்தீனுக்கு கிடைக்கும்.
வாஷிங்டன்:1967-ஆம் ஆண்டு அரபு போருக்கு முந்தைய இஸ்ரேல்-ஃபலஸ்தீன் எல்லைகளை உள்ளடக்கிய ஃபலஸ்தீன் நாட்டை உருவாக்க வேண்டுமென அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் கருத்தை இஸ்ரேல் நிராகரித்துவிட்டது. தேவையான ஒரு ஃபலஸ்தீன் நாடு உருவாகவும், பாதுகாப்பாக இஸ்ரேல் நிலைபெறவும் 67-ஆம் ஆண்டைய அரபு போரின் முந்தைய எல்லைகளை பாதுகாக்க வேண்டுமென ஒபாமா கருத்து தெரிவித்திருந்தார்.
ஆனால், ஒபாமாவின் முடிவை நடைமுறைப்படுத்த இயலாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். சமாதானத்திற்கான ஒபாமாவின் உள்ளார்ந்த நேர்மையை அங்கீகரிக்கிறோம். அதே வேளையில், ஃபலஸ்தீன் நாடு யூத நாட்டின் செலவில் உருவாக வேண்டாம் என நெதன்யாகு தெரிவித்துள்ளார். 2004-ஆம் ஆண்டு ஒபாமா அளித்த வாக்குறுதியில் உறுதியாக இருக்கவேண்டும்.67-ஆம் ஆண்டிற்கு முந்தைய நிலைமைக்கு பின் செல்லமாட்டோம் என இஸ்ரேல் முன்னரே தெரிவித்துவிட்டது. இதனை அமெரிக்கா அங்கீகரித்துள்ளது. ஃபலஸ்தீன் அகதிகளை மீண்டும் குடியமர்த்துவது ஃபலஸ்தீனிலாகும். மாறாக இஸ்ரேலில் அல்ல-நெதன்யாகு கூறுகிறார். 1967-ஆம் ஆண்டு அரபு போரில் இஸ்ரேல் கைப்பற்றிய மேற்கு கரையில் 3 லட்சம் யூத ஆக்கிரமிப்பாளர்கள் வசிக்கின்றனர். இந்த ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி எல்லைக்கு வெளியே உள்ளது. போருக்கு முந்தைய எல்லையை கணக்கிட்டு எல்லையை கணக்கிட்டு ஃபலஸ்தீன் நாடு உருவாக வேண்டுமென ஒபாமா முன்வைத்த கருத்தாகும். இதன்படி மேற்குகரை ஃபலஸ்தீனுக்கு கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக