திங்கள், மே 16, 2011

May 14 இஃபாலஸ்தீன் ஆக்கிரமிப்பு நாள்- உலக முஸ்லிம்களின் கருப்பு தினம்..

உலகம் முழுவதும் பாலஸ்தீன ஆக்கிரமிப்பு நாளான மே14 " நக்பா தினம்" அனுசரிக்கப்பட்டது . உலகின் பல்வேறு நாடுகளில் போராட்டமும், அணிவகுப்பும் நடந்தது. பாலஸ்தீன எல்லையான சிரியா மற்றும் லெபனான் ஆகிய நாடுகளிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பாலஸ்தீனின்  எல்லையில்  அவர்கள்  எதிர்த்து கோஷமிட்டனர். இவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாகிச்சூடு நடத்தியது.இதில் நான்கு பேர் உயிர் இழந்தனர் ,அதிகமானபேர் காயமுற்றனர்.   

இஸ்ரேலின் 63வது பிறந்த நாள்  முஸ்லிம்களின் 63வது  துக்க வருடம்டெல்அவீவில் இஸ்ரேல் தனது  63வது   ஆக்கிரமிப்பு வருடத்தை கோலாகலமாக கொண்டாடியது, அதில் வான வேடிக்கையும் , ராணுவ அணிவகுப்பும் ,விமான அணிவகுப்பும் நடந்தது. நாடு முழுவதும் இலவச இசை நிகழ்சிகள் நடத்தப்பட்டு ,தங்களின் முஸ்லிம் விரோத போக்கை கொண்டாடினர்.


இது சம்பந்தமாக அமெரிக்காவின் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் அளித்த வாழ்த்து செய்தியில், இஸ்ரேல் ஜனநாயகம் மற்றும் நம்பிக்கையின் சின்னமாக இருந்துவந்துள்ளது  என்றும் மேலும் அதன் வளர்ச்சியையும் ஜனநாயகத்தின் மீது கொண்டுள்ள கடப்பாட்டையும் பாராட்டுவதாகவும் உங்களுடைய வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு மற்றும் ஜனநாயக மேம்பாடு ஆகியவை உங்களுடைய குடிமக்களின் கடின உழைப்பிற்கு ஆதாரமாகும் என கூறியுள்ளார்.
       
பலஸ்தீனர்களின் சொந்த மண்ணை ஆக்கிரமித்து, அவர்களது இரத்தத்தின் மீதும் எலும்புகளின் மீதும் அமர்ந்து கொண்டு வெட்கமில்லாமல் சுதந்திர தினம்? கொண்டாடுகிறார்கள். இதற்கு அமெரிக்காவும் அதன் கைப்பாவை அமைப்பான .நா.சபையும் ஆதரவு தெரிவிக்கிறது. ஆனால் லிபியாவில் மட்டும் ஜனநாயகம் மலர வேண்டும். பொது மக்கள் கொல்லப்படக்கூடாது அதற்காக நேட்டோ படை வரும், அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளும் படை அனுப்பும், இஸ்ரேலின்  அக்கிரமங்களை தடுக்க அப்பாவி பாலஸ்தீனர்களை பாதுகாக்க படை அனுப்புமா  அமெரிக்கா ?

எந்த ஜனநாயகத்தை உயர்திரு.அமெரிக்க செயலாளர் ஹிலாரி அவர்கள் பாராட்டுகிறார்கள் ? பாலஸ்தீன மண்ணை அநியாயமாக  ஆக்கிரமித்த ஜனநாயகத்தையா? அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் அரசாங்கத்தை புறக்கணித்த ஜனநாயகத்தையா! இந்த ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக தான்  இராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் போர் செய்கிறீர்களாஆமாம் இஸ்ரேலியர்கள் கடின உழைப்பாளர்கள்தாம்  ஏனென்றால் உலகத்திலே  அவர்களால் மட்டும்தான் எந்த காரணமும் இன்றி பச்சிளம் குழந்தைகளையும், பெண்களையும், அப்பாவிகளையும் வருடம் முழுவதும் தொடர்ந்து கொலை செய்ய முடியும். ஆஹா! எவ்வளவு கடின நெஞ்சிற்கு சொந்தக்காரர்கள்.


இந்த அநீதி ஒருநாளும் நிலைக்காது, மற்ற அரபு நாடுகளைப்போல் பாலஸ்தீனத்திலும் நடக்கும் போராட்டம் ஒரு நாள் வெல்லும், நிச்சயமாக....

ஆக்கம்:-  ஃபைசல்
துணை :- bbc, jerusalam post,
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக