செவ்வாய், மே 24, 2011

ஈரான்:சி.ஐ.ஏவின் உளவு நெட்வர்க் முறியடிப்பு-30 பேர் கைது

டெஹ்ரான்:சி.ஐ.ஏவின் சிக்கலான உளவு நெட்வர்க்கை முறியடித்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகவலை மெஹர் நியூஸ் ஏஜன்சி தெரிவிக்கிறது. யு.ஏ.இ, துருக்கி, மலேசியா ஆகிய நாடுகளின் அமெரிக்க தூதரகத்தை மையமாக கொண்டு செயல்பட்ட உளவு நெட்வர்க் முறியடிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட 3 நாடுகளில் செயல்படும் 42 அமெரிக்க உளவு அதிகாரிகளை அடையாளம் கண்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானின் அணுசக்தி திட்டம்,வான்வழி பாதுகாப்பு முறைகள்,பயோடெக்னாலஜி துறை ஆகியன தொடர்பான தகவல்களை சேகரிப்பதுதான் சி.ஐ.ஏ உளவாளிகளின் திட்டமாகும். தொழிலாளர்களை தேர்வுச்செய்யும் ஏஜன்சியின் திரை மறைவில் உளவு வேலை நடந்துள்ளது.

வெளிநாடுகளில் வேலை, கல்வி ஆகிய வாக்குறுதிகளை அளித்து கல்வியறிவு பெற்ற அப்பாவிகளான நபர்களை தங்களின் வலைகளில் சி.ஐ.ஏ உளவாளிகள் சிக்கவைத்துள்ளனர். 1979-ஆம் ஆண்டு ஈரானில் இஸ்லாமிய புரட்சிக்கு பிறகு அமெரிக்காவும்,ஈரானும் தூதரக உறவை மேற்கொள்ளவில்லை. ஈரானின் அண்டை நாடுகளை மையமாக கொண்டு அமெரிக்கா உளவு வேலை பார்ப்பதாக சமீபத்தில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசிய ஆவணம் குறிப்பிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக