இந்தியாவில் அனைத்து சிறுவர், சிறுமிகளும் பள்ளிச்சென்று பயில வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாக கொண்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கம் சார்பாக நாடு முழுவதும் ‘ஸ்கூல் சலோ’ (பள்ளி செல்வோம்) என்ற நிகழ்ச்சி மே மாதம் முதல் தேதி துவங்கியது.
மே, ஜூன் மாதங்களில் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிக்கூட அட்மிஷன் நடைபெறும் வேளையாகும். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளிலுள்ள குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்கான களப்பணிகளில் ஈடுபடுவர்.
’ஸ்கூல் சலோ’ பிரச்சார நிகழ்ச்சியில் சுவரொட்டி மூலம் பிரச்சாரம், வீடுகளிலுள்ள மாணவர்கள் குறித்த ஆய்வு, மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க உதவுதல், படிப்பை பாதியில் கைவிட்டவர்களை மீண்டும் பள்ளிக்கூடத்தில் சேர்த்தல், பள்ளிக்கூடம் செல்லத் தேவையான பொருட்களை வழங்குதல்.
கல்வி உதவி திட்டம் குறித்து தெரிவித்தல், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு வகுப்புகளை ஏற்பாடு செய்தல் ஆகியன அடங்கும். இந்த பிரச்சாரத் திட்டம் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ள பகுதிகளை இலக்காகக் கொண்டு நடத்தப்படும்.
பாப்புலர் ஃப்ரண்டின் மாநில பிரிவு குறிப்பிட்ட கிராமங்களை கண்டறிந்து அதனை தொடர் கண்காணிப்பு மூலம் வளர்ச்சியடைய முயற்சி மேற்கொள்ளும். இத்திட்டத்திற்கு ’சர்வ சிக்ஷ க்ராம்’ என்று பெயர்.
படிப்பில் சிறந்து விளங்கும், ஏழ்மையான மாணவர்கள் பள்ளிக்கூட படிப்பை பாதியில் நிறுத்தவில்லை என்பது உறுதி செய்யப்படும். உள்ளூர்களிலுள்ள நன் கொடையாளர்கள் ஏழ்மையான நிலையிலுள்ள மாணவர்களில் ஒருவரை தத்தெடுத்து அவரது படிப்பை முடிக்கும் வரை படிப்பதற்கான ஏற்பாடுகள செய்ய வேண்டும்.
கடந்த சில வருடங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திவரும் ‘ஸ்கூல் சலோ’ பிரச்சாரம் நல்ல பலனை தந்துள்ளது. சமுதாய ஆர்வலர்கள், நலன் நாடுவோர், உள்ளூர் தலைவர்கள் அனைவரும் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் காலத்துக்கு உகந்த இந்த பிரச்சாரத்திற்கு தங்களது மிகுந்த ஆதரவை தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கே.எம்.ஷெரீஃப் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக