இந்தோனேஷியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு 8 கிலோ ஹெராயின் போதைப்பொருளை கடத்த முயன்ற மையூரன் சுகுமாரன், ஆன்ட்ரூ சான் என்ற 2 ஆஸ்திரேலிய வாலிபர்கள், பாலி விமான நிலையத்தில் கடந்த 2005–ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
இருவருக்கும் எந்த நேரத்திலும் தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற சூழ்நிலையில், தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு இந்தோனேஷியாவுக்கு, ஆஸ்திரேலியா வேண்டுகோள் விடுத்து உள்ளது. இது குறித்து பிரதமர் டோனி அப்போட் விடுத்துள்ள அறிக்கையில், ‘உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மரண தண்டனையை ஆஸ்திரேலியா எதிர்க்கிறது. எனவே அவர்கள் இருவருக்கும் கருணை காட்டுவதே சிறப்பு வாய்ந்தது’ என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவரும், வெளியுறவு மந்திரி ஜூலியா பிஷப்பும் இணைந்து, இந்தோனேஷிய அதிகாரிகளிடம் நேரடி பேச்சு நடத்தியதாக கூறிய டோனி அப்போட், இருவரையும் விடுவிக்க அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
இந்தோனேஷிய அதிபராக ஜோகோ விடோடோ பொறுப்பேற்ற பிறகு, அங்கு போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு தொடர்ந்து மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இது உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக