10 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் ஆயுள் கைதிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சவப்பெட்டிகளை ஏற்றி சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இருந்து கட்சியின் மாநில தலைவர் தடா ஜெ.அப்துல் ரகீம் தலைமையில் பேரணி நடந்தது.
கூவம் சாலையை பேரணி அடைந்ததும் அங்கு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதில் தடா அப்துல் ரகீம் பேசியதாவது:–
கடந்த 4 ஆண்டுகளாக சிறையில் முஸ்லிம் கைதிகள் உள்பட எந்த கைதிகளையும் தலைவர்களின் பிறந்த நாளில் விடுதலை செய்வதை நிறுத்தியுள்ளனர்.
இந்த நிலை தொடர்வதால் சிறையில் முஸ்லிம் கைதிகள் பல நோய்க்கு உட்பட்டு மரணம் அடையும் நிலை ஏற்படுகிறது.இதன் காரணமாக சமீபத்தில் 2 முஸ்லிம் கைதிகள் இறந்துள்ளனர். தற்போது 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் 2 முஸ்லிம் கைதிகள் நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகின்றனர்.
எனவே 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாழும் முஸ்லிம்கள் உள்பட எல்லா கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும். இல்லையென்றால் தமிழக சிறையில் உள்ள எல்லா முஸ்லிம் கைதிகளையும் கருணை கொலை செய்து உடல்களை எங்களிடம் ஒப்படையுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஏர்வாடி காசிம், தடா நிஜாம், பாதுஷா, அலிமல் புகாரி, அலி அப்துல்லா, ஷமா, திர்தோஸ், ஆசிப் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக