இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்தது. இதில் முதல் முறையாக தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அதிக அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளது.
இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் ஆளும் ராஜபக்சேவுக்கும் அவரின் அரசில் மந்திரியாக இருந்த மைத்ரிபால் சிறிசேனாவுக்கும் கடும் போட்டி நிலவுகிறது.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற்றது. இதில் அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழர்கள் மற்றும் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. முதல் 7 மணி நேர வாக்குப்பதிவில் 65-70 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கலாம் என்று தேர்தல் அதிகாரிகள் கணித்துள்ளனர்.
பெரிய அளவில் கலவரங்கள் நடைபெற்றதாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் சில இடங்களில் 4 மணிக்கு மேல் வாக்களிக்க வாக்காளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று தனியார் கண்கானிப்பு குழுக்கள் தெரிவித்தன.
இன்று இரவு 10 மணி முதல் தபால் வாக்குகள் முடிவு அறிவிக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று தேர்தல் ஆணையர் மகிந்தா தேஷ்பிரியா தெரிவித்தார்.
மிரட்டல் முயற்சியையும் மீறி தமிழர்கள் அதிகம் வசிக்கும் மூன்று வடக்கு மாவட்டங்களான ஜாப்னா, கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களில் 50 சதவீதத்திற்கும் மேலான வாக்குகள் பதிவாகியுள்ளது. முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், வாக்களிக்குமாறு வாக்காளர்களை மத தலைவர்கள் மசூதிகளில் உள்ள ஒலிப்பெருக்கி மூலம் ஊக்கப்படுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக