நீண்ட நாட்களாக உடல்நல குறைபாடு காரணமாக அவதியுற்றுவந்த பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமணன் புனேவில் காலமானார். அவருக்கு வயது 94.
94 வயதான லட்சுமணன் சிறுநீரக தொற்று காரணமாக கடந்த சனிக்கிழமை மாலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். லஷ்மணனின் பல முக்கிய உடல் உறுப்புகள் செயலிழந்து விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அவர் நேற்று உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 6.50 மணியளவில் அவர் மரணம் அடைந்தார் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல்வாதிகள் குறித்து கேலிச்சித்திரங்கள் வரைந்து சமூகத்தின் பிரதிபலிப்பாக திகழ்ந்தவர் ஆர்.கே லட்சுமணன் இருப்பினும் அவர் பிற்பகுதியில் கார்டூன்கள் வரைவதை நிறுத்திவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மனைவி கமலா மற்றும் மகன் ஸ்ரீநிவாசால் அவரை பார்த்துக் கொள்ளபட்டு வந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக