இந்திய பாதுகாப்புத் துறையின் கீழ் ஒடிஸா மாநிலத்தின் சந்திப்பூரில் இயங்கி வரும் ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்தில் இடைக்கால் ஆய்வு மண்டலத்தில்–Interim Test Range (ITR)– புகைப்படக் கலைஞராகப் பணியாற்றும் ஈஷ்வர் சந்த்ரா பஹ்ரா என்பவர் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பின் உளவாளியாகச் செயல் பட்டு வந்ததை அடுத்து தேசீயப் புலனாய்வு முகமை(N I A )யால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் நடத்திய விசாரணையின் போது, கடந்த பத்து மாதங்களாக அவர் ஏவுகணை மற்றும் இதர ராணுவ ரகசியங்களையும், புகைப்படங்களையும் ஐ.எஸ்.ஐ அமைப்புக்கு வழங்கி வந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார் என்றும் பல முறை கொல்கத்தாவில் இருக்கும் ஐ.எஸ்.ஐ முகவரைச் சந்தித்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார் என்றும் ஒடிஸா மாநிலக் காவல்துறைத் தலைமை ஆய்வாளர் (I G ) ஏ.கே பாணிக்ரஹி தெரிவித்தார்.
ஈஷ்வர் மீது 120 பி – சதிக் குற்றம் மற்றும் 121ஏ தேச துரோகம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக