ஞாயிறு, மே 03, 2015

பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணை கற்பழிக்க முயற்சி மின்கம்பத்தில் கட்டி வைத்து சாமியாருக்கு செருப்படி


பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணை கற்பழிக்க முயற்சி மின்கம்பத்தில் கட்டி வைத்து சாமியாருக்கு தர்மஅடி கொடுக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு கதக் மாவட்டம் நரகுந்த் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள ரேவண்ணா சித்தேஷ்வரா மடத்தில் சாமியாராக இருந்து வருபவர் சித்தப்பாஸ்ரீ.
இவர், பரிகார பூஜை செய்வதற்காக பக்தர்களின் வீடுகளுக்கே சென்றுவருவது வழக்கம். இந்த நிலையில், நேற்று காலையில் நரகுந்த் பகுதியில் வசிக்கும் ஒரு பெண் வீட்டிற்கு பரிகார பூஜை செய்வதற்காக சாமியார் சித்தப்பாஸ்ரீ சென்றார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத போது அந்த பெண்ணிடம் சித்தப்பாஸ்ரீ தவறாக நடந்து கொண்டதுடன், அவரை கற்பழிக்க முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களிடம் தெரிவித்தார். உடனே ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாமியார் சித்தப்பாஸ்ரீயை பிடித்து ஊருக்கு மத்தியில் இருந்த மின் கம்பத்தில் கயிற்றால் கட்டினார்கள். பின்னர் அவரை கிராம மக்கள் செருப்பால் அடித்து தாக்கினார்கள். மேலும் சில வாலிபர்களும் சாமியார் சித்தப்பாஸ்ரீயை சரமாரியாக அடித்து, உதைத்தனர். இதில், காயம் அடைந்த அவர் மயக்கம் அடைந்தார். இதுபற்றி அறிந்ததும் நரகுந்த் போலீசார் விரைந்து வந்து சித்தப்பாஸ்ரீயை மீட்டனர்.

போலீஸ் விசாரணையில், சித்தப்பாஸ்ரீ தன்னை சாமியார் என்று கூறிக் கொண்டு, பரிகார பூஜை செய்வதாக சொல்லி பல பெண்களிடம் தவறாக நடக்க முயன்றதும் தெரியவந்து உள்ளது. இதுகுறித்து நரகுந்த் போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்தப்பாஸ்ரீயை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக