வெள்ளி, மே 15, 2015

இந்தியாவின் வரைபடத்தை சீன தொலைக்காட்சி தவறாக வெளியிட்டதால் சர்ச்சை

பிரதமர் நரேந்திர மோடி சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்தியாவின் வரைபடத்தை சீனாவின் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று தவறாக வெளியிட்டதால் சர்ச்சை வெடித்துள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் சீன சுற்றுப்பயணத்தை பற்றி தொகுத்து வழங்கி கொண்டிருந்த சீனாவின் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சிசிடிவி இந்தியாவின் வரைபடத்தை ஜம்மு காஷ்மீர்  மற்றும் அருணாச்சல பிரதேசம் மாநிலங்கள் இடம் பெறாமல் ஒளிபரப்பியது பெருத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அருணாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள சில பகுதிகளை சீனா தங்கள் நாட்டின் பகுதிகள் என்று கூறி வருகிறது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்தியா மறுத்து வருகிறது. ஆசியாவின் மிகப்பெரும் நாடுகளான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவில் பெரும் சிக்கலாக உள்ள இந்த பிரச்சினையை சிறப்பு பிரநிதிகள் மூலம் தீர்க்க இருநாடுகளும் முயன்று வருகின்றன. 

இதுவரை சிறப்பு பிரநிதிகள் குழு 18 க்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. எல்லைப்பிரச்சினை அருணாச்சல பிரதேசத்தில் 2 ஆயிரம் கி.மீட்டருக்குள் அடங்கி விடும் என்று சீனா கூறிவருகிறது. இருப்பினும் மேற்கு பகுதியில் உள்ள 4 ஆயிரம் கி.மீட்டர் வரை உள்ள இடமும் சர்ச்சைக்குள் இருக்கும் பகுதிதான் என்று இந்தியா கூறி வருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக