திங்கள், மே 11, 2015

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

நீர்மூழ்கி கப்பலில் இருந்து புறப்பட்டு கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து எதிரியின் இலக்கை தாக்கும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வடகொரியா அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. இது கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
உலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வடகொரியா கடந்த 2006, 2009, 2013 ஆண்டுகளில் தொடர்ந்து அணுகுண்டு சோதனை நடத்தியது. இதற்காக அந்த நாட்டின் மீது ஐ.நா. பொருளாதார தடை விதித்துள்ளது. இதே போன்ற தடையை மேற்கத்திய நாடுகளும் விதித்துள்ளன.

வடகொரியாவிடம் தற்போது 15-க்கும் மேற்பட்ட அணுகுண்டுகள் இருக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகின. அடுத்த ஆண்டு இறுதிக்குள் தன்னிடம் இருக்கும் அணுகுண்டுகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கு அந்த நாடு திட்டமிட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.வடகொரியா தொடர்ந்து பொருளாதார நெருக்கடியில் தத்தளித்துக்கொண்டிருந்தாலும், தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மட்டும் விட்டு விடவில்லை. 

வடகொரியா, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்துவதற்கு ஐ.நா. சபை ஏற்கனவே தடை விதித்துள்ளது. அந்த தடைக்கு மத்தியிலும், வடகொரியா தொடர்ந்து இத்தகைய சோதனைகளை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் கடலுக்கு அடியில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து புறப்பட்டு, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்குதல் நடத்துகிற வல்லமை படைத்த அதிநவீன ஏவுகணை சோதனையை அந்த நாடு வெற்றிகரமாக நடத்தி உள்ளது. 

இந்த ஏவுகணை சோதனை, அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் மேற்பார்வையில் நடந்துள்ளது. இது தொடர்பான படங்களை வடகொரிய அரசு நாளிதழ் ‘தி ரோடாங் சின்மம்’ வெளியிட்டுள்ளது.


வடகொரியா நிறைய அணுகுண்டுகளை வைத்திருந்தாலும், இப்போது கடலுக்கடியில் நீர் மூழ்கிக்கப்பலில் இருந்து புறப்பட்டு சென்று, கண்டம் விட்டு கண்டம் தாவி சென்று தாக்குதல் நடத்துகிற ஆற்றல் வாய்ந்த ஏவுகணை சோதனையை நடத்தி இருப்பது, அதிநவீனமானது; நீர்மூழ்கி கப்பலில் இருந்து புறப்பட்டு சென்று தாக்குதல் நடத்தும் சாதனங்களை கண்டறிவது என்பது கடினமான ஒன்று என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக