ஞாயிறு, மே 24, 2015

ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றது சட்ட நடைமுறைகளுக்கு எதிரானது: இளங்கோவன் பேட்டி

ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றது சட்ட நடைமுறைகளுக்கு எதிரானது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை கூறியுள்ளார். 

மேலும் பேசிய அவர், ஜெயலலிதா பதவியேற்பு நிகழ்ச்சியில் தேசிய கீதம் முழுமையாக பாடப்படாமல் இரண்டு வரியுடன் நிறுத்திக்கொண்டனர். இதனால் பதவி பிரமாணத்தை அவமரியாதை செய்துள்ளனர். மத்திய அரசு ஜெயலலிதாவின் பதவி பிராமாணத்தை அரசியல் சாசன நெறிமுறைகளுக்கு எதிரானதாக உள்ளதால் ரத்து செய்ய வேண்டும். இந்தியாவிலேயே யாரும் இப்படி ஒரு பதவிப்பிரமாணத்தையும் எடுத்தது கிடையாது.

இப்போது பதவியேற்ற அமைச்சர்கள் எல்லோருமே ஊழல் செய்தவர்கள்தான். சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பு தவறானது என தெரிகிறது. அதனை விமர்சனம் செய்யும்போது அதிமுகவினர் வழக்குப் போடுவதாக கூறுகின்றனர். அவர்கள் வழக்கு போடட்டும். நான் சந்திக்க தயார். கர்நாடக அரசு இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும். அங்குள்ள அட்வகேட் ஜெனரல் இதை தெரிவித்துள்ளார். ஒருவேளை கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யவில்லை என்று வந்தால் காங்கிரஸ் சார்பில் மேல்முறையீடு செய்வோம் என்றார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக