திங்கள், மே 11, 2015

இன்று தேர்தல் நடத்தினாலும் டெல்லியில் ஆம் ஆத்மி அமோக வெற்றிபெறும்: கெஜ்ரிவால்

டெல்லி அரசை விமர்சித்து தவறான செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளுக்கு எதிராக முதன்மை செயலாளரிடம் புகார் தெரிவிக்க வேண்டும். பின்னர் வழக்கு தொடர வேண்டும் என்று மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதற்கிடையே ஊடகங்கள் குறித்து கவலைப்பட வேண்டாம். இன்று டெல்லிக்கு தேர்தல் நடத்தினாலும் ஆத்மி கட்சி 72 சதவீத வாக்குள் பெற்று அமோக வெற்றிபெறும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து கெஜ்ரிவால் கூறியதாவது:-

பத்திரிகைகளில் என்னவென்றாலும் வரலாம். ஆனால் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி குறித்து 15 நாட்களுக்கு ஒரு முறை நான் சர்வே நடத்துகிறேன். டெல்லியில் சட்டசபை தேர்தல் நடத்தினால் அதில் ஆம் ஆத்மி கட்சி கடந்த முறை வாங்கிய 54.59 சதவீதத்தை விட அதிக அளவு 72 சதவீத வாக்குகள் பெறும். கடந்த தேர்தலுக்குப் பிறகு நமது நிலைமை பெருமளவில் உயர்ந்துள்ளது. அவர்களுடைய (மத்திய அரசு) மதிப்பு அவர்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து குறைந்துள்ளது. ஆனால், நம்முடைய மதிப்பு அதிகரித்துள்ளது.

டெல்லியல் நாம் ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் நாம் செய்தது என்னவென்றும், மத்திய அரசு ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்தில் செய்தது என்னவென்றும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

மீடியாக்கள் நம்மை எதிர்மறையாக காட்டுகிறது. இதுபற்றி நாம் கவலை படவேண்டாம். டெல்லி மக்கள் நம்மோடு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக