திங்கள், மே 18, 2015

முஹம்மது முர்ஸிக்கும், யூசுஃப் அல் கர்ளாவிக்கும் மரண தண்டனை!

சதிப் புரட்சியின் மூலம் நீக்கம் செய்யப்பட்ட எகிப்தின் அதிபர் முஹம்மது முர்ஸிக்கு எகிப்து நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
முஹம்மது முர்ஸி மற்றும் 105 இஃக்வானுல் முஸ்லிமீன் தலைவர்களுக்கான தண்டனை தீர்ப்பை கெய்ரோ குற்றவியல் நீதிமன்றம் முஃப்தியிடம் ஒப்படைத்துள்ளது.
நத்ரூன் சிறை உடைப்பு, ஹமாஸுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டியது உள்ளிட்ட வழக்குகளில் நீதிபதி ஷஃபான் ஷாமியின் தலைமையிலான நீதிமன்றம் தண்டனையை தீர்ப்பளித்துள்ளது.
கத்தரில் வசிக்கும் உலக முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் அவையின் தலைவர் டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவியும் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் அடங்குவார்.

மேலும் ஃபலஸ்தீனில் உயிர் தியாகம் செய்தவர்களும், இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டவர்களும் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் அடங்குவார்கள். முஃப்தியின் கருத்தை கேட்டறிந்த பிறகு ஜூன் மாதம் 2-ஆம் தேதி நீதிமன்றம் இறுதி முடிவை தெரிவிக்கும். முஃப்தியின் கருத்தை நடைமுறைப்படுத்துவதும், நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்குமான சுதந்திரம் நீதிமன்றத்திற்கு உள்ளது.

கடந்த மாதம் ஒரு வழக்கில் முர்ஸிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக