பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் டேவிட் கேமரூன் தலைமையிலான ஆளும் கன்சர்வேடிவ் கட்சி அதிக இடங்களை பிடித்து தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
அங்கு மொத்தமுள்ள 650 தொகுதிகளில், இதுவரை 540 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 245 இடங்களும், மிலிபாண்ட் தலைமையில் போட்டியிட்ட தொழிலாளர் கட்சிக்கு 212 இடங்களும், நிகோலா ஸ்டர்ஜியன் தலைமையிலான ஸ்காட்டிஷ் தேசிய கட்சிக்கு 55 இடங்களும், பீட்டர் ராபின்சன் தலைமையிலான டெமாக்ரடிக் யூனியனிஸ்ட் கட்சிக்கு 8 இடங்களும், நிக் க்ளெக் தலைமையிலான லிபரல் ஜனநாயக கட்சிக்கு 6 இடங்களும் கிடைத்துள்ளன.
வெற்றி முகத்தில் இருப்பது தெரிந்தவுடன் செய்தியாளர்களுடன் பேசிய கேமரூன் கூறுகையில், கன்சர்வேட்டிவ் கட்சிக்கு இன்றைய நாள், மிக பலத்த நள்ளிரவாக அமைந்தது என்றார். அதே போல் தோல்வியை ஒப்புக்கொண்ட எடி மிலிபாண்ட், தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாகவும், வருத்தத்தை தருவதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக பி.பி.சி. தொலைக்காட்சி வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் கேமரூன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டது. கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 316 இடங்களும், தொழிலாளர் கட்சிக்கு 239 இடங்களும் கிடைக்கும் என பி.பி.சி. கருத்துக்கணிப்புகள் கூறியது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக