ஞாயிறு, மே 10, 2015

மாஸ்கோ அணிவகுப்பில் ஏவுகணை தாங்கிச் சென்ற டேங்க் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் நாஜிப்படையை வென்றதின் 70-ம் ஆண்டு நினைவு தின பேரணி நேற்று ரஷ்யாவின் தலைநகரமான மாஸ்கோவில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான ரஷ்ய மக்கள் கலந்து கொண்டு கண்கவர் பேரணியை உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.
இந்த அணிவகுப்பில் ரஷ்யா தனது ராணுவ வல்லமையை வெளிப்படுத்தும் விதமாக அந்த நாட்டின் ஏவுகணைகள், ராணுவ ஊர்திகள் மற்றும் தளவாடங்களும் இடம்பெற்றிருந்தன. இந்த ஊர்வலத்தின்போது பக் (BUK) என்ற ஏவுகணையை சுமந்து வந்த டேங்க் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் பேரணியை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தீ எரிந்ததால் அந்த இடம் புகை மண்டலமாக மாறியது. பெரும் அசம்பாவிதம் நடைபெறுவதற்குள் சுதாகரித்துக்கொண்ட அதிகாரிகள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீப்பற்றிய சிறிது நேரத்தில் தீயை அணைத்து விட்டதாவும், அதன்பின் அந்த டேங்க் பேரணியில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டதாகவும் ராணுவத் தகவல்கள் கூறியதாக மெயில் ஆன்லைன் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆயில் லீக் ஆகியதால் தீ விபத்து ஏற்பட்டு புகை ஏற்பட்டது. இந்த தீ அருகில் உள்ள வாகனங்களுக்கு பரவியிருந்தால் என்ன ஆகியிருக்கும்?. ஆனால், அங்கே பெரிய தீ விபத்து, அவரச நிலை, எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்த விழாவில் இந்திய பிரதமர், சீன அதிபர் உள்பட 25 நாடுகளில் தலைவர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக