வியாழன், ஆகஸ்ட் 01, 2013

ம.பி.: பாஜக அரசுக்கு எதிராக அக்கட்சியின் மாணவர் பிரிவு போராட்டம்!

மத்தியப் பிரதேச பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக அக்கட்சியின் மாணவர் பிரிவான அகில் பாரதிய வித்யா பரிஷத் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்தது.

போபாலில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நடைபெறுவதாக குற்றம்சாட்டி ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஆளுநர் மாளிகை நோக்கி முன்னேற முயன்ற போராட்டகாரர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து கலையச் செய்தனர்.
பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இது ஜனநாயகப் படுகொலை என்று விமர்சித்துள்ள அகில் பாரதிய வித்யா பரிஷத்தின் பிரதிநிதிகள், பல்கலைக்கழகங்களின் வேந்தரும் மத்தியப் பிரதேச ஆளுநருமான ராம் நரேஷ் யாதவ் தனது உறவினர்களை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களாக நியமித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக