சவுதி அரேபியாவில், ஓட்டுனரே இல்லாத மெட்ரோ ரயில் திட்டம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் ஓட்டுனரே இல்லாத மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க உள்ளதாகவும், வருகிற 2014ம் ஆண்டில் முதல் காலாண்டில் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
6 வழிப்பாதையாக அமைய உள்ள இந்த மெட்ரோ ரயில் தடம் பாலைவனத்தின் அதிசயம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ரயில் தடம் ரியாத்தில் இருந்து கிங் கெலாட் விமான நிலையத்தையும் இணைக்கும் வகையில் அமையும் என்றும், அரசு அலுவலகங்கள், பல்கலைகழகங்கள், முக்கிய மையங்களின் அருகே செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முழுக்க முழுக்க அனைத்து பெட்டிகளிலும் ஏசி வசதி செய்யப்பட்டுள்ள இந்த ரயில் மணிக்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள், அரசு ஊழியர்கள், புறநகர் பகுதிகளில் வசிப்போர் பயனடைவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே பிரான்ஸ் போன்ற நாடுகளில் ஓட்டுனர்கள் இல்லாத மெட்ரோ ரயில்கள் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக