துபாய்: எகிப்தில் அல் அஸ்ஹர் பல்கலைக்கழக அறிஞர் டாக்டர் அஹ்மத் அல் தய்யிபிற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட 17-வது துபாய் சர்வதேச இஸ்லாமிய ஆளுமைக்கான விருது வாபஸ் பெறப்பட்டு பிரபல இஸ்லாமிய பிரச்சாரகர் இந்தியாவைச் சார்ந்த டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கு வழங்கப்பட்டது.
துவக்கத்தில் டாக்டர் அஹ்மத் அல் தய்யிபிற்கு இவ்விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எகிப்தில் நிகழ்ந்த அநியாய ராணுவப்புரட்சியை கண்டித்து அந்நாட்டில் மக்கள் கொந்தளித்து பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த அநியாயத்திற்கு ஆதரவு அளித்த தய்யிபிற்கு விருதை வழங்கினால் பெரும் சர்ச்சையை கிளப்பும் என கருதி விருதை துபாய் அரசு வாபஸ் பெற்றுள்ளதாக கருதப்படுகிறது. இவ்விருதை துபாயில் நடந்த நிகழ்ச்சியில் துபாயின் ஆட்சியாளர் ஷேக் முஹம்மது பின் ராஷித், ஜாகிர் நாயக்கிற்கு வழங்கினார்.
1965-ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த ஜாகிர் நாயக் மருத்துவத்தில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றுள்ளார். இஸ்லாமும், நவீன விஞ்ஞானம் தொடர்பாக டாக்டர் ஜாகிர் நாயக் உலகின் பல்வேறு நாடுகளில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான உரைகளை நிகழ்த்தியுள்ளார். அவரது உரையை கேட்டு இஸ்லாத்தை புரிந்து ஏராளமானோர் இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக மாற்றிக்கொண்டார்கள். 2006-ஆம் ஆண்டு ஜாகிர் நாயக்கால் நிறுவப்பட்டுள்ள பீஸ் டீ.விக்கு உலகமெங்கும் 10 கோடுக்கும் அதிகமான நேயர்கள் உள்ளனர். இவ்விருதுடன் 10 லட்சம் திர்ஹம் (இந்திய மதிப்பில் 1 கோடியே 60 லட்சம் ரூபாய்) பணம் வழங்கப்படும். ஏற்கனவே இவ்விருதை இந்தியாவைச் சார்ந்த தலைசிறந்த முஸ்லிம் மார்க்க அறிஞரான மறைந்த மவ்லானா அபுல் ஹஸன் நத்வி அவர்கள் பெற்றுள்ளார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக