கோக்ரஜார்: அஸ்ஸாம் மாநிலத்தின் கோக்ரஜாரின் பித்யா பிகாஸ் கல்லூரியில் ஜூலை 28,2013 அன்று ரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் சார்பாக கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய,பள்ளிப் படிப்பில் சிறந்த மாணவா;களின் உயா; கல்விக்காக இந்த உதவி தொகைகள் வழங்கப்பட்டன.சமூகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு, குறிப்பாக சிறுபான்மை சமூகத்தை சார்ந்த மாணவர்களுக்கு இந்த உதவி தொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 33 மாணவர்களுக்கு 1,38,000 ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டது. கோல்பாரா, கம்ருப், கோஸைகாவ்ன், பிஜ்னி, பொங்கைகான் மற்றும் போடோ தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள கோக்ரஜார் மற்றும் சிராங் பகுதியின் மாணவர்கள் இதன் மூலம் பயன்பெற்றனர்.
ரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷனின் அஸ்ஸாம் பகுதி பொதுச் செயலாளர் அப்துல் பத்தீன் நிகழ்ச்சியின் துவக்க உரையாற்றினர். கோஸைகான் கல்லூர்யின் பொருளாதார துறையை சார்ந்த பேராசிரியர் ஷம்சுல் ஹக் சிறப்புரையாற்றினார். ஏழை மக்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து அவர் உரையாற்றினார். ரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷனின் நலப்பணிகள் குறித்து விவரித்த கஜூ ரஹ்மானின் (துணை பிராஜெக்ட் மானேஜர்) நன்றிரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
அஸ்ஸாம் நிவாரணங்கள் வழங்கும் திட்டத்தின் ஐந்தாவது கட்டமாக நான்கு கிராமங்கள் ரிஹாப் தோர்ந்தெடுத்துள்ளது. கோக்ரஜார் மாவட்டத்தின் ஜூனம்மா கேம்ப், சிராங்கின் பாட்டைமரி, பொங்கைகான் மாவட்டத்தின் சோலமாரி மற்றும் ஜராகுரி கிராமங்கள் தோர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மறுவாழ்வு மற்றும் முழுமையான வளர்ச்சிக்காக இந்த கிராமங்கள் தோர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவை அல்லாமல் மாதிரி கிராமத்தின் குடிமக்களுக்கு இஃப்தார் கிட்களும் வழங்கப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக