சவூதி அரேபியா, யு.ஏ.இ, பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் ராணுவத்தின் நடவடிக்கையை ஆதரிக்கும் வேளையில் வெனிசூலா அதிபர் நிகோலஸ் மத்யூரா முர்ஸிக்கு உடனடியாக அதிபர் பதவியை மீண்டும் வழங்க கோரிக்கை விடுத்துள்ளார். அத்தோடு எகிப்தில் உள்ள வெனிசூலா நாட்டு தூதரும் திரும்ப அழைக்கப்பட்டுள்ளார்.
அவர் தெரிவித்த கண்டன அறிக்கையில், ‘எகிப்தின் இரத்தக் களரியில் எங்களின் ஏராளமான அரபு சகோதரர்கள் கொல்லப்படுவது குறித்து துக்கம் அடைகிறோம். முர்ஸிக்கு எதிராக நடந்த ராணுவப் புரட்சி அரசியல் சாசனத்துக்கு எதிரானது. அமெரிக்காவும், இஸ்ரேலும் ராணுவப் புரட்சியின் பின்னணியில் உள்ளன.’ என்று மத்யூரா தெரிவித்துள்ளார்.
இதில் யார் முஸ்லிம் ...முஸ்லிம்களின் மானம் மரியாதை காப்பாற்ற பட வேண்டும் அனைத்து முஸ்லிம்களும் சகோதரர்கள் என்று கூறிய மார்க்கத்தில் பிறந்து மேலைநாடுகளுக்கு அடிமைகளாக ஆஹிவிட்ட முஸ்லிம் நாடுகளின் தலைவிதியை காட்டாயம் மாற்ற வேண்டும் ..இவர்கள் இந்த0 புனிதமான மார்க்கத்தை விட்டு வெளியேறி நாங்கள் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்
பதிலளிநீக்கு