வியாழன், ஆகஸ்ட் 22, 2013

எகிப்தில் ராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிராக உலகெங்கிலும் மக்கள் கொந்தளிப்பு!

எகிப்தில் இராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்புகெதிராக ஜனநாயக ரீதியில் போராடிக் கொண்டிருக்கும் மக்கள் மீது, இராணுவம் மற்றும் காவல்துறையின் கொடூரத் தாக்குதல்களினால் குழந்தைகள், பெண்கள்,இளைஞர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

இந்த நிகழ்வு முழு உலகத்தையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இதை பல்வேறு நாடுகள் கண்டித்திருந்தபொழுதிலும் இராணுவத்தின் அடக்குமுறைகள் குறைந்தபாடில்லை. துப்பாக்கிச் சூடுகளும், கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வைத்து தாக்குதல் நடத்துவதும் தொடர் கதையாகி விட்டன. இதனைக் கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி போராடத் துவங்கியுள்ளனர்.
 நியூயார்க்கில் ஞாயிற்றுக்கிழமை கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் இராணவத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஐ.நா.வை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பதவி நீக்கம் செய்யப்பட்ட முஹம்மது முர்ஸியை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இராணுவம் மற்றும் காவல்துறைக்கு எந்தவித உதவிகளையும் வழங்கக்கூடாது என்று, உலக நாடுகளை ஐ.நா. வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
 இதில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஒபாமா அரசு இராணுவத்துக்கு வழங்கி வரும் பொருளாதார உதவிகளை உடனே நிறுத்த வேண்டும் என்றும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
 இந்த ஆர்ப்பாட்டத்தில் முக்கியமான பேச்சாளர்கள், இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைப்புகளின் செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டு எகிப்து இராணுவத்துக்கெதிராக தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்தனர்.
 கனடா நாட்டில் டொரன்டோவில் உள்ள பாராளுமன்றத்தை நோக்கிய பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணிக்கு அதிபர் முர்ஸியின் முன்னாள் ஆலோசகர் அஹமது எலிமாம் (கனடா நாட்டு எகிப்தியர்) தலைமை வகித்தார்.
 இதில் டாக்டர். யாஸர் ஹதாரா, டாக்டர். வைல் ஹதாரா, இஸ்மாயில் லாட்னி மற்றும் கனடா நாட்டு எகிப்திய செயல்பாட்டாளர்கள், தற்பொழுது எகிப்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், துருக்கி, பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த இஸ்லாமிய தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினார்கள்.
 மிஸ்ஸகு, ஸ்கோர்போ, டவுண் டொரன்டோ மற்றும் துரோன்கிலிப் பார்க்,ஈஸ்ட் யார்க் டொரன்டோ ஆகிய இடங்களில் இருந்து ஆதரவாளர்கள் பஸ்களில் வந்து கலந்து கொண்டனர்.
 உரையாற்றிய தலைவர்கள் அரசு இந்த ராணுவத்தின் கொடூரத் தாக்குதலை கண்டிக்குமாறு அரசை வலியுறுத்தியும் மற்றும் கனடா அதிபர் இந்தக் தாக்குதலுக்கு தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்யக்கேரியும் அரசைக் கேட்டுக் கொண்டனர்.
 மேலும், எகிப்தில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை தடுத்து நிறுத்தவும் ஐக்கிய நாடுகள் சபையை கேட்டுக் கொண்டனர்.
 ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எதிப்தில் பாதிக்கப்பட்டவர்களை சித்தரிக்கும் புகைப்படங்கள் மற்றும் எகிப்து, கனடா நாட்டு கொடிகளை தங்களுடைய கைகளில் ஏந்தியவாறு நின்றனர். எகிப்தில் இராணுவத்தின் தாக்குதலில் கனடா நாட்டு எகிப்தியரான அம்ர் காசிம் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 லண்டனில் நடைபெற்ற பேரணியை முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு  ஏற்பாடு செய்ததில் முர்ஸியில் ஆதரவாளர்கள் 500க்கும்மேற்பட்டோர் கலந்து கொண்டு எகிப்து இராணுவத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
 எகிப்தின் ஜனநாயகத்தை கொலை செய்து கொண்டிருக்கும்  இராணுவ தளபதி அப்துல் பதாஹ் அல் சிசிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் வலியுறுத்தி அதிபர் கேமரூன் அவர்களை கேட்டுக் கொண்டனர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக